வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

படம் ரிலீஸ் ஆகணும்னா நா சொல்றத செய்ங்க ஜி.. ஷங்கரை அடிபணிய வைக்கும் லைக்கா

Shankar Indian 2: இப்ப வருது அப்ப வருது என பல வருடங்களாக இந்தியன் 2 படம் பூச்சாண்டி காட்டி வருகிறது. ஆனால் இன்னும் வந்த பாடாக இல்லை. உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து சங்கர் இயக்கி லைக்கா மற்றும் ரெட் ஜெயன்ட் சேர்ந்து தயாரித்த படம் தான் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்தும் ரிலீஸ் தேதியே அறிவிக்காமல் இருக்கிறார்கள்.

ஏற்கனவே படம் எடுக்கும்போது ஏகப்பட்ட பிரச்சனையை சந்தித்து தான் ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் ரிலீஸ் ஆவதற்கும் ஒரு சில சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இப்படம் ரிலீஸ் ஆகவேண்டும் என்றால் நான் சொல்வதைக் கேளுங்கள் என்று லைக்கா ஷங்கருக்கு ஒரு செக் வைத்திருக்கிறார்.

Also read: ரெட் ஜெயண்டுக்கு தர மறுத்த விஜய்.. நேரம் பார்த்து செக் வைத்த உதயநிதி, முன்கூட்டியே கணித்த சவுக்கு சங்கர்

அதாவது இப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம், ஷங்கரிடம் எப்பொழுதுதான் இந்தியன் 2 படத்திற்கான வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டேன் என்று சொல்வீர்கள் என கேட்டிருக்கிறார். அதற்கு சங்கர், காட்சிகள் அதிகமாக இருப்பதால் என்னால் எடிட் பண்ண முடியவில்லை வேண்டுமென்றால் பார்ட் 3 எடுப்போமா என்று கேட்டிருக்கிறார். இதைக் கேட்டதும் லைக்கா ரொம்ப டென்ஷன் ஆகி விட்டது.

அதற்கு லைக்கா நிறுவனம் ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறது. அதாவது நீங்க ஆசைப்பட்ட மாதிரி பார்ட் 3 வேண்டும் என்றால் இந்தியன் 2 படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் ரிலீஸ் ஆகவேண்டும். அப்படி ரிலீஸ் ஆகிவிட்டால் கண்டிப்பாக இந்தியன் 3 பண்ணலாம் என்று கூறி இருக்கிறது.

Also read: தில்ராஜுக்கு 90 கோடி வேட்டுவைத்த சங்கர்.. கேம் சேஞ்சர் படத்தால் விழி பிதுங்கும் தயாரிப்பாளர்

இதை கேட்டதும் சங்கர் ரொம்பவே சந்தோஷத்தில் லைக்கா சொன்ன எல்லா விஷயத்திற்கும் தலையை ஆட்டிக்கொண்டு அப்படியே பம்பரமாக இந்தியன் 2 வேலையில் முழுமூச்சுடன் இறங்கி விட்டார். ஆக மொத்தத்தில் சங்கர் இந்த ஒரு விஷயத்திற்காகத்தான் ரொம்ப நாளாகவே அடிபோட்டிருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.

அதனாலேயே அந்த பாய்ண்ட் வைத்து சரியான முறையில் லாக் செய்திருக்கிறது லைக்கா நிறுவனம். எது எப்படியோ கூடிய விரைவில் இந்தியன் 2 படம் வெளிவரப் போகிறது என்பது உறுதியாகிவிட்டது. அத்துடன் சங்கர் இப்படத்தில் வேலைகளை சீக்கிரமாக முடிக்க வேண்டும் என்பதினால் தெலுங்கு படமான கேம் சேஞ்சர் படத்தை இப்போதைக்கு வேண்டாம் என்று ஓரமாக ஒதுக்கி வைத்திருக்கிறார்.

Also read: கமல் சொல்வதை கொஞ்சம் கூட மதிக்காத ஷங்கர்.. இந்தியன் 2 மீண்டும் துளிர் விட்ட சண்டை

Trending News