Ignoring Vishal, Udhayanidhi donated 1 crore to the actor’s association building: வீட்டைக் கட்டிப் பாரு கல்யாணத்தை பண்ணி பாரு சும்மாவா சொன்னாங்க ஏன்னா ரெண்டுமே ரொம்ப கஷ்டமான வேலை. ஆனா இங்க ஒருத்தர் ரெண்டுத்தையும் ஒன்னா செய்வேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார் . யாரு நம்ம துப்பறிவாளன் மார்க் ஆண்டனிதான் ஆனா வீடுஇல்ல, தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் .
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பழைய அணிக்கு மாற்றாக நாசர் தலைமையிலான விஷால், கார்த்தி, கருணாஸ் ஆகியோரை கொண்ட புதிய அணி களம் இறங்கி பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றது. இந்த அணியின் முக்கிய நோக்கம் நடிகர் சங்க கட்டடத்தை பிரம்மாண்ட முறையில் கட்டுவதே ஆகும்.
சென்னை தி.நகரில் நடிகசங்கத்தின் கட்டிடம் கட்டப்பட்ட வந்த நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக கட்டடத்தின் வேலைகள் பாதியிலே நிறுத்தப்பட்டு பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டன.
Also read: விஷால் எடுத்த விபரீத முடிவு! விஜய்யை வைத்து செஞ்ச பின்புதான் அரசியலா?
தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டி முடித்த பின்பு தான் கல்யாணம் என்று ஒத்த காலில் நிற்கிறார் நடிகர் விஷால். நண்பர் மீது உள்ள அக்கறையோ அல்லது நடிகர் சங்கத்தின் மீது உள்ள அக்கறையோ, நடிகரும் அமைச்சருமான உதயநிதி அவர்கள் பாதியில் நிறுத்தப்பட்ட நடிகர் சங்க கட்டடத்தின் வேலைகள் தொடங்குவதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி அளித்து உள்ளார். ஆனால் நீதி அளிக்கும் போது ஒரு தரமான சம்பவத்தை அரங்கேற்றினார் அதுஎன்னவென்றால்,
விஷால் மற்றும் உதயநிதிக்கு இடையே இலைமறை காயாக சில பிரச்சனைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. சர்ச்சைகளுக்கு அஞ்சாத சிங்கம் விஷால் அவர்கள் அடிக்கடி அறிக்கைகள் விட்டும், சென்னை மழை வெள்ளத்தின் போது அரசை விமர்சித்து ஆளும் அரசு சீண்டிக்கொண்டே இருந்தார்.
மேலும் கலைஞர் 100 விழாவிற்கு நடிகர் விஷால் வராதது, புதிதாக கட்சி ஆரம்பித்து தேவையில்லாத கருத்துக்களை கூறுவது என இவரின் செய்கைகளால் கடுப்பாகிப் போனார் உதயநிதி.
செக்கை வயதில் மூத்தவரான நாசர் இடம் கொடுத்தால் கூட பிரச்சனை இல்லை. ஆனால் பணத்தை கார்த்தி இடம் கொடுத்து படம் எடுத்து விஷாலை ஓரம் கட்டி கார்த்தி தான் அடுத்த தலைவர் என்பதை சொல்லாமல் செய்து காட்டிவிட்டார் உதயநிதி.
ஆனால் இதுபற்றி பெரிதும் அலட்டி கொள்ளாத விஷால் நடிகர் சங்கம் கட்டடம் கட்ட நிதி தந்த எல்லாமும் ஆன நண்பர் உதயநிதிக்கு நன்றி என ட்விட் போட்டு உள்ளார். இதைபார்த்த நெட்டிசன்களும் பத்து வருஷமா கட்டுறீங்க இன்னுமுமா கட்டிமுடிக்கல? என்று நக்கலுடன் பதிவிட்டு வருகின்றனர். தேர்தல் வந்தால் ஓட்டு, பணம் கொடுத்த திமுகவிற்கா? பணம் வாங்கிய சினிமாக்காரர்களுக்கா? சினிமாக்காரர்கள் யார்பக்கம் நிற்பார்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
Also read: அப்பா வழியே வேண்டாம்ன்னு உதறிய 5 வாரிசுகள்.. உதயநிதி, மாதவன் பசங்க போடும் போடு