சனிக்கிழமை, பிப்ரவரி 1, 2025

30 வருடத்திற்கு பின் தயாரிப்பில் கல்லா கட்ட போகும் இளையராஜா.. யார் ஹீரோ தெரியுமா.?

இன்றும், என்றும் இனிமையான காதல் பாடல் என்றாலே இளையராஜா தான். 80ஸ் கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை எல்லாம் வயதினரையும் கவரும் பாடல்களை தர இளையராஜாவால் மட்டும்தான் முடியும். இளையராஜா பாடலில் மட்டுமில்லாமல் சில படங்களையும் தயாரித்துள்ளார்.

இவர் தமிழில், அலைகள் ஓய்வதில்லை, கோழி கூவுது, கொக்கரக்கோ, கீதாஞ்சலி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, ராஜாதி ராஜா, சிங்காரவேலன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். இந்நிலையில் 30 வருடம் கழித்து மீண்டும் இளையராஜா தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

தற்போது இளையராஜா பாவலர் கிரியேஷன்ஸ் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை தயாரிக்கவுள்ளார். இந்நிலையில், இளையராஜா மீது மிகுந்த அபிமானம் கொண்டு பாலிவுட் இயக்குனரான பால்கி, ரஜினியை சந்தித்து கதையைக் கூறியதாகவும், அந்தக் கதையும் ரஜினிக்கு பிடித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இயக்குனர் பால்கி அவருடைய எல்லா படத்துக்கும் இளையராஜாவையே இசையமைப்பாளராக பயன்படுத்துவார். இந்நிலையில் பால்கி, ரஜினியை வைத்து இயக்கும் படத்தில், தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், இளையராஜாவும் 1994 ஆம் ஆண்டு வெளியான வீரா படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். அதற்குப்பிறகு 28 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தில் இணைய உள்ளார்கள். இதனால் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகாக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

ilayaraja-cinemapettai
ilayaraja-cinemapettai

Trending News