200 கோடியில் பங்கு கேட்ட இசைஞானி.. கமுக்கமாக முடிவுக்கு வந்த பஞ்சாயத்து

Ilaiyaraaja
Ilaiyaraaja

Ilaiyaraaja: அண்மைக்காலமாகவே இசைஞானி இளையராஜா ஏதாவது ஒரு பஞ்சாயத்தில் சிக்கி கெட்ட பெயரை சம்பாதித்து வருகிறார். இதை மீடியாக்களும் பரபரப்பு செய்தியாக மாற்றி விடுகிறது. ஆனால் சம்பந்தப்பட்டவரோ இதை பெரிதாக கண்டு கொள்வதில்லை.

ஆனாலும் அவரின் பாடல்களின் ராயல்டி சம்பந்தப்பட்ட சர்ச்சை இன்னும் ஓய்வதாக இல்லை. அதில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் குணா பாடலின் கண்மணி அன்போடு காதலன் பாடல் இடம் பெற்றிருந்தது.

இன்னும் சொல்லப்போனால் இப்பாடல் தான் படத்தை வெற்றி பெற செய்ததோடு 200 கோடி லாபம் பார்க்க உதவி இருக்கிறது. கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் கொண்டாடப்பட்ட இப்படத்தில் தன்னுடைய பாடல் இடம் பெற்றதற்கு அனுமதி வாங்கவில்லை.

நஷ்ட ஈடு கொடுத்த மஞ்சுமல் பாய்ஸ்

அதனால் எனக்கு இரண்டு கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதனால் பதறிப்போன தயாரிப்பு தரப்பு அனுமதி வாங்கியதாக கூறியிருந்தனர். ஆனாலும் இளையராஜா அவர்களை விடுவதாக இல்லை.

அதைத்தொடர்ந்து நடந்த இந்த பஞ்சாயத்தில் கோர்ட் கேஸ் என அலைய வேண்டாம் என கமுக்கமாக பேசி முடிவெடுத்து இருக்கின்றனர். அதன்படி இரண்டு கோடி கொடுக்க முடியாது என கூறிய தயாரிப்பு தரப்பு தற்போது 60 லட்சம் கொடுக்க சம்மதித்து இருக்கின்றனர்.

இதனால் மஞ்சுமல் பாய்ஸ் பட பஞ்சாயத்து ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும் இளையராஜா இவ்வளவு கராராக இருக்க வேண்டாம் என்றும் சிலர் சத்தம் இல்லாமல் பேசி வருகின்றனர். இதில் சன் பிக்சர்ஸ் கூலி படத்திற்கு எதிராக அவர் அனுப்பிய நோட்டீஸ் தான் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ராயல்டி விவகாரத்தில் இளையராஜா கிளப்பிய பஞ்சாயத்து

Advertisement Amazon Prime Banner