
Ajith-Ilaiyaraaja: அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. மிகப்பெரும் கௌரவமான இந்த விருதை பெற்றதற்கு அவர் தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து இருந்தார்.
இதற்குப் பின்னால் அரசியல் இருக்கிறது என வழக்கம் போல சலசலப்பும் இருந்தது. ஆனாலும் இதை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடினார்கள்.
அதேபோல் தற்போது இசைஞானி இளையராஜாவுக்கும் உயரிய விருது ஒன்று கிடைக்க இருக்கிறது. சமீபத்தில் அவர் சிம்பொனி இசையை லண்டனில் அரங்கேற்றி இருந்தார்.
சிம்பொனி நாயகனுக்கு கிடைக்கும் அங்கீகாரம்
இந்த சாதனையை அவரின் ரசிகர்களும் பொதுமக்களும் கொண்டாடினார்கள். அதேபோல் பாரபட்சமில்லாமல் எல்லா அரசியல் பிரபலங்களும் அவரை தேடிச் சென்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதன் மூலம் அவர் மேல் இருந்த அரசியல் சாயம் நீக்கப்பட்டதாக கூட பேசப்பட்டு வருகிறது. மேலும் இளையராஜா இந்த நிகழ்வுக்குப் பிறகு பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில் அவருக்கு பாரத ரத்னா விருது கிடைக்க இருக்கும் தகவல் கசிந்து உள்ளது. எம்ஜிஆர், அப்துல் கலாம் உள்ளிட்ட 8 தமிழர்கள் இதுவரை இந்த விருதை பெற்றுள்ளனர்.
அதை தொடர்ந்து இளையராஜாவுக்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைக்க இருப்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை தான். சிம்பொனி நாயகனுக்கு கிடைக்கும் பெரும் அங்கீகாரம் இது.