வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தனுஷை பாடாய் படுத்தும் இளையராஜா.. படம் லேட்டாக இது தான் காரணமாம்

தனுஷ் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்துள்ளார். இட்லி கடை ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கு நடுவில் நிலவுக்கு என்மேல் என்னடி கோவம் படத்தின் பணிகளையும் கவனித்து வருகிறார் தனுஷ். தனுஷின் நடிப்பில் கடைசியாக ராயன் படம் வெளியாகி 100 கோடி கிளப்பில் இணைந்தது.

இது ஒரு பக்கம் இருக்க கோலிவுட்டில் இப்போது அதிக படங்களை வைத்திருப்பது தனுஷ்தான். அடுத்ததாக அவர் ஹிந்தியில் ஒரு படம், ஹாலிவுட்டில் ஒரு படம், லப்பர் பந்து இயக்குநருடன் ஒரு படம், அமரன் இயக்குநருடன் ஒரு படம், போர்தொழில் இயக்குநருடன் ஒரு படம், இளையராஜாவின் பயோபிக், இட்லி கடை என பல படங்களை வைத்திருக்கிறார். இவற்றில் இட்லி கடை படத்தை அவரே இயக்கி நடிக்கவும் செய்கிறார்.

தனுஷை பாடாய் படுத்தும் இளையராஜா

இந்த நிலையில் கைவசம் இத்தனை படங்கள் வைத்திருந்தாலும் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியாகி இதுவரை ஷூட்டிங் கூட துவங்கப்படமல் இருக்கிறது இளையராஜா பயோபிக். தமிழ் சினிமாவின் இசையை மாற்றி அமைத்த லெஜண்ட் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார்.

இதை அவர் மிகவும் மகிழ்ச்சியோடு வெளியிட்டார். ஆனால் அதற்கு பிறகு எந்த வேலையும் ஆரம்பிக்கப்படவில்லை. சூழ்நிலை இப்படி இருக்க இதற்கான காரணம் என்ன என்பதை பற்றிய தகவல்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. முதலில் படத்தை தயாரிப்பதாக இருந்த மெர்குரி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்திலிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இளையராஜா இயக்குனர் மற்றும் ஹீரோக்கு ஒரு முக்கிய கண்டிஷன் போட்டுள்ளார்.

தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை தெரிவிப்பதற்காக அருண் மாதேஸ்வரன் மற்றும் தனுஷை தன்னுடன் ஒரு வருடம் பயணிக்கும்படி இளையராஜா கேட்டுக்கொண்டதாகவும்; அதன்படி அருண் மாதேஸ்வரன் இப்போது ராஜாவுடனேயே பயணப்படுகிறார் என்று கூறப்படுகிறது.

ஆனால் தனுஷாள் அது சாத்தியப்படாது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று. பிசி அக்டராக இருக்கும் அவரை, ஒருவருடம் சும்மா என்னுடன் பயணம் செய் என்று சொன்னால் யார் தான் ஒப்புக்கொள்வார்கள். இதை தொடர்ந்து தனுஷ் தன் வேளையில் கவனம் செலுத்தி வருவதனால், பயோபிக் வருமா வராதா? அல்லது அருண் மாதேஸ்வரன் மட்டும் போதும் என்று இளையராஜா சொல்லிவிட்டார் என்று ஒன்றும் புரியவில்லை. மொத்தத்தில் படம் இழுத்தடிக்க போவது மட்டும் confirm.

Trending News