திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

மத்தவங்கள மாதிரி எனக்கு வேலை வெட்டி இல்லன்னு நெனச்சீங்களா.. இளையராஜா வெளியிட்ட வீடியோ

Ilaiyaraja: கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இளையராஜா பற்றி வெளிவந்த ஒவ்வொரு செய்தியும் பரபரப்பு தான். அதிலும் கூலி பட டீசருக்கு எதிராக அவர் வெளியிட்ட நோட்டீஸ் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து சினிமா விமர்சகர்கள், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் உள்ளிட்ட பலரும் இளையராஜா பற்றி பேசி இருந்தனர். அதில் ஜேம்ஸ் வசந்தன் பல கேள்விகளை எழுப்பி இருந்தார்.

அதேபோல் வைரமுத்துவும் தன் பங்குக்கு சோசியல் மீடியா பதிவுகளை போட்டு வந்தார். இவை அனைத்தும் ஏற்கனவே எரியும் தீயில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியது.

இசைஞானியின் சாதனை

ஆனால் இந்த பரபரப்புக்கு காரணமானவரோ வெளிநாட்டில் தன் வேலையை பார்த்து வந்தார். இடையே அங்கு எடுத்த போட்டோக்களையும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில் இளையராஜா தற்போது ஒரு வீடியோ மூலம் நல்ல செய்தி ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது கடந்த சில வாரங்களாக என்னை பற்றி வெளிவரும் செய்திகளை எனக்கு வேண்டியவர்கள் சொல்வார்கள்.

ஆனால் இதில் எல்லாம் நான் கவனம் செலுத்துவது கிடையாது. என்னுடைய வேலையை மட்டுமே நான் பார்த்து வருகிறேன். அந்த வகையில் தற்போது ஒரு சிம்பொனியை நான் எழுதி முடித்து விட்டேன்.

வெறும் 35 நாட்களில் இதை நான் செய்து விட்டேன் என்பதை என்னுடைய ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் உங்கள மாதிரி எல்லாம் எனக்கு வேலை வெட்டி இல்லன்னு நினைச்சிங்களா? நான் சாதனையை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் என அவர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

Trending News