தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43-வது படமான மாறா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தை சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளார். தெலுங்கில் நடிகர் தனுஷ் நேரடியாக நடிக்கும் முதல் படம் இதுவாகும்.
இப்படத்தை இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில்உருவாகவுள்ளது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது 38வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் இளைய சூப்பர் ஸ்டார் என்று அடைமொழி வைத்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
![dhanush](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/07/dhanush-5-528x1024.jpg)
தற்போது தனுஷ் தமிழ் சினிமாவில் கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார். கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு அடைமொழி வைத்து போஸ்டர் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.