திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நரிதந்திரத்தை அரங்கேற்றும் புஸ்ஸி ஆனந்த்.. இளையதளபதியை கண்அசைவில் ஆட்டி வைக்கும் கொடூரம்!

Ilaya thalapathy vijay is operated by Bussy Anand in politics: “நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், ஏழைகள் வேதனை பட மாட்டார்கள்” என அரசியலில் சூழலில் சிக்கி சீரழிந்தவர்கள் ஏராளம். மீண்டது ஒருவர் கூட கிடையாது. “ஒரு பைசா கூட வாங்காது, வயிற்றுக்கு சோறு போட்டு, கல்வி கண் திறந்த காமராஜரையே தோற்கடித்த கூட்டமடா இந்த கூட்டம்!” தன் ரசிகர்களை மட்டுமே நம்பி முதல்வராக கனவு கண்டுள்ளார் இளைய தளபதி.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றி படங்களை கொடுத்து வரும் இளைய தளபதி விஜய் அவர்கள் தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தும் பொருட்டு சமீபத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மன்றத்தை உருவாக்குவது, கொடி தயாரிப்பது, மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது என பல சமூக சேவைகளில் தன்னை முன்னிறுத்திக் கொண்டார் இளைய தளபதி இவருக்கு இத்தகைய ஆலோசனைகளை கொடுத்து வலது கரமாக இருப்பவர் விஜய்யின் ரசிகர் மன்ற தலைவராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் என்கின்ற கபடதாரி.

Also read : விஜய்யை வளர்த்துவிட்ட சூப்பர் குட் ஃபிலிம்ஸ் 5 படங்கள்.. இளைய தளபதியை தூக்கி நிறுத்திய பூவே உனக்காக

தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக திராவிட கட்சிகளே ஆட்சிக்கட்டிலில்  அமருகிறது. இதனை உடைக்கும் வண்ணம் மத்தியில் உட்கார்ந்திருக்கும் நடுவன் அரசை சேர்ந்த பெரும்புள்ளிகள் தமிழ்நாட்டில் பிரபலங்களின் மூலமாக இளைஞர்களின் ஓட்டை பிரித்து தங்களுக்கு சாதகமாக்க முயல்கின்றனர். இதில் ரஜினி சிக்காமல் போகவே  சட்டசபை தேர்தலில் அனைத்து செலவுகளையும் ஏற்பதாக கூறி வலையை புஸ்ஸி ஆனந்த் மூலமாக தளபதிக்கு விரித்துள்ளனர்.

தன்னை விஜய் மக்கள் ரசிகர் மன்ற தலைவராக சிபாரிசு செய்த விஜய்யின் தந்தை எஸ்ஏசி அவர்களை விஜய்யுடன் நெருங்க விடாமல் பிரித்து வைத்தார் புஸ்ஸி ஆனந்த். இளைய தளபதி யாரை பார்க்க வேண்டும், பார்க்க கூடாது என்பது முதலாக பல அண்டர் கிரவுண்ட் வேலைகளை செய்து வரும் புஸ்ஸி ஆனந்த்தை நம்பி களம் இறங்கும் விஜய்யின் அரசியல் வேதனை அளிக்கிறது.

தமிழக வெற்றி கழகம் 2026 இல் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, பெரும்பான்மையான இடங்களை பிடித்து தளபதி முதல்வராவார் என்ற நம்பிக்கையில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் வெறித்தனமாக செயல்பட்டு வருகின்றனர். ஆட்டமா! சதிராட்டமா என்று தன்னைச் சுற்றி ஆடப்படும் அரசியல் சதுரங்கத்தில், புஸ்ஸி ஆனந்த் காய்களை நகர்த்த, வெற்றி பெறுவோம் என்ற மிதப்பில் ராஜாவாக நிற்கிறார் இளைய தளபதி விஜய்.

Also read: விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பிரச்சனைல மாட்டிவிடும் 5 விஷயங்கள்.. இதுக்கு சரின்னா அடுத்த முதல்வர் விஜய் தான்

Trending News