புதன்கிழமை, ஜனவரி 8, 2025

இளையராஜாவாக மாறும் தனுஷ்.. வைரமுத்து நட்பின் விரிசல், ஏ ஆர் ரகுமானின் ஆதிக்கம், விடை சொல்லும் பயோபிக்

இன்று காலை முதலே தனுஷ் வெளியிட போகும் அப்டேட்டுக்காக ரசிகர்கள் தவமிருந்து வந்தனர். அவர்களை அதிகம் காக்க வைக்காமல் தற்போது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிக்கப் போவதாக ஒரு தகவல் உலா வந்தது. அதை உறுதி செய்யும் பொருட்டு தற்போது போஸ்டர் வெளியாகி உள்ளது.

அந்த போஸ்டரில் தனுஷ் ஹார்மோனிய பெட்டியுடன் ரெட்ரோ கால உடை அணிந்து சென்னை சென்ட்ரல் அருகில் நிற்கிறார். அதில் இசையின் ராஜா என்ற வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. இப்படி பல விஷயங்களை போஸ்டரில் தெரியப்படுத்தியுள்ளனர்.

இசையின் ராஜா இளையராஜா

ஆனால் இசையமைப்பாளர் யார் என்பதை மட்டும் குறிப்பிடவில்லை. இதுவே மிகப்பெரும் ட்விஸ்ட் ஆக இருக்கிறது. ஆனால் நிச்சயம் இதற்கு இளையராஜா தான் மியூசிக் என்பது தெரிந்த கதை தான்.

அந்த வகையில் பல சொல்லப்படாத உண்மைகள் இப்படத்தின் மூலம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வைரமுத்து இளையராஜாவின் பிரிவுக்கான காரணமும் சொல்லப்படலாம்.

அதேபோல் இளையராஜாவை ஓரம் கட்ட வந்தவர் தான் ஏ ஆர் ரகுமான். இப்படி ஒரு செய்தி பல ஆண்டுகளாக இருக்கிறது. இவர்கள் இருவருக்குள்ளும் ஒரு மறைமுக பனிப்போர் இருப்பதாகவும் ஒரு தகவல் உண்டு.

இவையெல்லாம் இந்த வாழ்க்கை வரலாற்றில் காட்டப்படுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஆக மொத்தம் யாருக்கும் கிடைக்காத பெருமை தனுஷுக்கு கிடைத்துள்ளது.

அவருடைய நடிப்பு பற்றி எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இயக்குனர் தான் யோசிக்க வைக்கிறார். இருந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News