திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கங்கை அமரனை அடித்து விரட்டிய இளையராஜா.. காரணமாக இருந்த பிரபலம்

இன்றளவும் இளையராஜா இசைக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு இருந்து தான் வருகிறது. இரவு நேர நீண்ட பயணம் என்றால் உடனே நினைவுக்கு வருவது இளையராஜா பாடல்கள் தான். இளையராஜா உச்சத்தில் இருந்தபோது வேறு புது இசையமைப்பாளர்கள் வந்தாலும் இளையராஜாவின் பெயர் மட்டுமே நிலைத்து நின்றது.

அப்படி இருக்கையில் இளையராஜாவுக்கும் அவருடைய தம்பி கங்கை அமரனுக்கும் மிகப்பெரிய பிரச்சனை வெடித்தது. இதற்குப் பின்னால் ஒரு பிரபலம் தான் இருந்திருக்கிறார். பிரபல இயக்குனர் ஒருவர் தன்னுடைய படத்தில் இளையராஜாவுக்கு பதிலாக அவருடைய தம்பி கங்கை அமரனை இசையமைக்க சொல்லியிருக்கிறார்.

Also read: தில்லானா மோகனாம்பாள் போல் வெற்றி கண்ட இளையராஜா .. 9 பாடலுக்காகவே வெள்ளிவிழா கண்ட படம்

அதாவது மலேசியா வாசுதேவன் ஒரு படத்தை இயக்கி அவரே நடித்திருந்தார். அப்போது அந்த படத்தில் இளையராஜாவை இசை அமைப்பாளராக போட்டால் நிறைய செலவாகும். காரணம் இளையராஜா அப்போது முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து வந்தார். இவருடைய சம்பளமும் அப்போது பல மடங்கு இருந்தது.

இதை கருத்தில் கொண்ட மலேசியா வாசுதேவன் கங்கை அமரனை இந்த படத்திற்கு நீ தான் இசையமைக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். கங்கை அமரனும் இசை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்னை விட்டு விடு எனக் கூறியிருக்கிறார். ஆனாலும் மலேசியா வாசுதேவன் விட்ட பாடு இல்லை.

Also read: இளையராஜாவின் ஆணவத்தை அடக்கிய பாலச்சந்தர்.. பெரிய ஜாம்பவான்களை உருவாக்கிய படம்

எப்படியோ ஒரு வழியாக கங்கை அமரனை தனது படத்தில் இசையமைக்க சம்மதம் வாங்கி படத்தையும் தொடங்கி விட்டார். இந்த செய்தி அப்போது செய்தித்தாளில் வெளியாகி இருந்தது. இதை பார்த்து கடுப்பான இளையராஜா கங்கை அமரனை கண்டபடி திட்டி உள்ளார். உனக்கு இசையை பற்றி என்ன தெரியும், மூஞ்சிலேயே முழிக்காத என திட்டிவிட்டு சென்றுள்ளார்.

அதன் பின்பு யார் சமாதானம் பேசினாலும் இளையராஜா சமாதானம் ஆன பாடு இல்லை.
கடைசியாக அவர்களது குரு ஜிகே வெங்கடேஷ் அவரிடம் பேசி வேறு யாராவது இசையமைப்பதற்கு உன் தம்பியே அந்த படத்தில் இசையமைக்கட்டும் என்று சொன்ன பிறகு இளையராஜா விட்டுக் கொடுத்துள்ளார்.

Also read: 23 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த கூட்டணி.. இளையராஜாவிடம் தஞ்சம் அடைந்த ரீ என்ட்ரி நடிகர்

Trending News