வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இளையராஜா அதிகமாக இசையமைத்தது இவர் படத்துக்கு தான்.. ரஜினியை மட்டும் தவிர்த்த இசைஞானி

தமிழ் சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும் இளையராஜாவுக்கு என்று தனி இடம் இருக்கிறது. அதிலும் இவருடைய மெல்லிசை பாடல்களுக்கு மயங்காத ரசிகர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு 80 காலகட்ட தமிழ் சினிமாவை இவர் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார்.

இப்போதும் கூட இவருடைய இசைக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் இளையராஜா பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அதில் இவர் அதிகமாக இசையமைத்தது உலக நாயகன் கமல்ஹாசனின் திரைப்படங்களுக்கு தான்.

Also read:பாடலை மட்டுமே வைத்து ஹிட்டித்த ராமராஜனின் 4 படங்கள்.. இளையராஜா வளர்த்துவிட்ட ஹீரோ

புன்னகை மன்னன், குணா, விருமாண்டி, நாயகன் போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளது. அந்த வகையில் இவர்களின் கூட்டணி ஒரு வெற்றி கூட்டணியாகவே பார்க்கப்பட்டது. இவ்வாறு கமல் திரைப்படங்களுக்கு அதிகமாக இசையமைத்த இளையராஜா ரஜினியின் படங்களை மட்டும் தவிர்த்தாராம்.

எஜமான், வீரா உள்ளிட்ட பல ரஜினி திரைப்படங்களுக்கு இளையராஜா இசை அமைத்திருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு அவர் ரஜினி படங்களை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால் சூப்பர் ஸ்டாரின் திரைப்படத்தில் மாஸ் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.

Also read:இளையராஜா பாஞ்சாயத்து கூட்டின 4 பெரும் புள்ளிகள்.. காதில் கூட கேட்காத ஏ ஆர் ரகுமான்

அதற்காக சிறிது நேரம் செலவழித்து டியூன் போட வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் இளையராஜா மற்ற திரைப்படங்களில் பயங்கர பிசியாக இருந்ததால் ரஜினியின் படங்களை தவிர்த்து வந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ரஜினியின் லிங்கா திரைப்படத்திற்காக அவரை அணுகிய போது கூட சில காரணங்களால் அதை அவர் தவிர்த்து விட்டாராம்.

அதன் பிறகு தான் அந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இவ்வாறு கமல் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த இளையராஜா இந்த காரணங்களால் தான் ரஜினி படங்களுக்கு அதிகமாக இசையமைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Also read:மதிக்காத இளையராஜாவிடம் பாக்யராஜ் பண்ணிய தாஜா.. உச்சகட்ட பொறாமையில் இசை ஞானி

Trending News