வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

பட்ஜெட் இல்ல, சம்பளம் வாங்காமல் இசையமைத்த இளையராஜா.. அல்டிமேட் ஹிட் அடித்த பாடல்கள்

Ilayaraja: இப்போது வேண்டுமானால் இளையராஜாவை பற்றி ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் ஆரம்ப காலத்தில் அவர் ஒரு குழந்தை மாதிரி அனைவரிடமும் பழகக் கூடியவர். அது மட்டுமல்ல நிறைய தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் வளர்த்து விட்ட பெருமைக்குரியவர்.

அதிலும் ஒரு படத்திற்கு பட்ஜெட்டே இல்லாமல் இயக்குனர் தயாரிப்பாளராக மாறிய போது, அந்த படத்திற்கு சம்பளம் வாங்காமல் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. இயக்குனர் பி. வாசு அவர்கள் இயக்கிய முதல் திரைப்படம் பன்னீர் புஷ்பங்கள். இந்தப் படத்தில் இசையமைக்க இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

Also Read: இளையராஜாவிடம் காலில் விழுந்து கெஞ்சியும் இறங்காத மனசு.. பிடிவாதத்தால் பலிக்கடாக மாட்டிய நடிகர்

தயாரிப்பாளர் கிடைக்காமல் எப்படியோ பினான்ஸ் ரெடி பண்ணி படத்தின் பட்ஜெட் 5 லட்சம் என முடிவு செய்யப்பட்டது. அந்த சமயத்தில் இளையராஜா ஒரு லட்சம் சம்பளம் வாங்கி வந்தார். இளையராஜாவிடம் சம்பளம் எவ்வளவு என்று கேட்க, அதற்கு இளையராஜா அதெல்லாம் இருக்கட்டும் முதல்ல இசை வேலை முடியட்டும் என சொல்லிவிட்டார்.

அதன் பிறகு எல்லாம் முடிந்து பி. வாசு கங்கை அமரனை அண்ணனுக்கு எவ்வளவு சம்பளம் என பேச அழைத்துச் சென்றார். அப்போது இளையராஜா சம்பளம் எல்லாம் ஒன்னும் வேண்டாம். முதல்ல படம் நல்லபடியா வெற்றி அடையட்டும் அப்புறம் பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டார்.

Also Read: ஏஆர் ரகுமானை யூஸ் பண்ணிய இளையராஜா.. காலம் கடந்தும் தெரியாமல், கிடைக்காத அங்கீகாரம்

பி. வாசு, ‘என்ன அண்ணாஎன்னென்ன சொல்றீங்க! உண்மையாவா? என்று கேட்க, உடனே இளையராஜா ‘நீ தான் ஸ்ரீதர் கிட்ட நான் தான் இசையமைக்கணும்னு சண்டை போட்டு எப்படியோ வர வச்ச. அதனால இந்த படம் நல்லபடியா வெற்றி அடைந்து அப்புறம் வா அடுத்தடுத்து சம்பளத்தை பத்தி பேசிக்கலாம்’ என்று சொல்லிவிட்டார்.

இந்த சம்பவத்தை இப்பொழுது சொல்லும் பொழுதும் பி. வாசு கண்ணீருடன் தான் சொல்கிறார். பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இடம்பெற்ற கோடை கால காற்றே, ஆனந்த ராகம், பூந்தளிர் ஆட போன்ற பாடல்கள் அனைத்தும் மனதை வருடும் அளவிற்கு அமைந்திருக்கும். இதனால்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் சூப்பர் ஹிட் ஆனது சொல்லப்போனால் இந்த படத்தின் பாடலுக்காகவே படமும் ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு இளையராஜாவுடன் பல படங்களில் தொடர்ந்து பணியாற்றி பி. வாசு வெற்றியடைந்தார்.

Also Read: இந்த 4 இசையமைப்பாளர்களை வளர விடாமல் தடுத்த இளையராஜா.. வல்லவனுக்கு வல்லவனாக வந்த இசைப்புயல்

Trending News