ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ஜெயலலிதாவின் தோழிக்கு காதல் விண்ணப்பம் போட்ட இசை ஞானி.. இதையும் மறைக்காம சொல்லுவீங்களா தனுஷ்.?

Actor Dhanush: தனுஷ் இளையராஜாவின் பயோபிக்கில் நடிப்பது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.

அதைத்தொடர்ந்து இப்படம் எப்படி இருக்கும் என்ற பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் இளையராஜாவுக்கு எந்த அளவுக்கு புகழ் இருக்கிறதோ அதே அளவுக்கு சர்ச்சைகளும் இருக்கிறது.

அதில் பலரும் அறியாத ஒரு விஷயமும் இருக்கிறது. அதாவது இசைஞானி 70 காலகட்டத்தில் காயத்ரி வீணா என்ற இசை கலைஞரை காதலித்திருக்கிறார்.

இசைஞானியின் காதல்

அவரிடம் தன் காதலையும் அவர் சொல்லி இருக்கிறார். ஆனால் அப்பெண் இவருடைய காதலை நிராகரித்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆகி இருக்கிறார்.

இந்த காயத்ரி வீணா வேறு யாரும் கிடையாது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி ஆவார். இந்த விஷயம் பயோபிக்கில் வெளிவருமா? என்ற ஒரு கேள்வி இப்போது எழுந்துள்ளது.

பொதுவாக வாழ்க்கை வரலாற்று படங்களில் எந்த ஒளிவு மறைவும் இருக்காது. ஆனால் இளையராஜா அதை வெளிப்படையாக சொல்வதற்கு சம்மதிப்பாரா என்பது சந்தேகம் தான்.

தனுஷ் இசைஞானியின் தீவிர ரசிகன். அதனாலேயே இந்த பயோபிக் இவர்களுக்கு சாதகமாக இருக்குமா? அல்லது உண்மையை உடைத்து கூறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News