வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நீங்க எல்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாது.. பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த இளையராஜா

இசை உலகின் ஜாம்பவானாக பல தலைமுறைகளை கடந்து நிற்கும் இளையராஜா எப்போதுமே ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷலான மனிதர் தான். 47 வருடங்களாக தன்னுடைய இசையால் அனைவரையும் மகிழ்வித்து கொண்டிருக்கும் இவர் இப்போதும் இளம் தலைமுறைகளுக்கு சவால் விடும் வகையில் பாடல்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த விடுதலை படத்தில் இவருடைய இசை அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றது. அதை தொடர்ந்து தற்போது மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலஜி வெப் தொடரிலும் இவர் தன் திறமையை நிரூபித்து இருக்கிறார். தியாகராஜன் குமாரராஜா தயாரித்துள்ள இந்த தொடரை அவருடன் இணைந்து பாரதிராஜா உட்பட ஆறு இயக்குனர்கள் இயக்கியுள்ளனர்.

Also read: என்ன ஒரு கேவலமான தற்பெருமை.. இளையராஜாவின் முகத்திரையை கிழித்த சூப்பர் ஸ்டார்

இது தற்போது நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தியாகராஜன் குமாரராஜா கூட இளையராஜாவின் திறமையை பற்றி புகழ்ந்து பேசி இருந்தார். மேலும் அவர் குறித்து வெளிவரும் அவதூறுகள் எதுவும் உண்மை கிடையாது. அவர் உண்மையிலேயே இசைஞானி தான் என்று சப்போர்ட் செய்தும் பேசி இருந்தார்.

ஏனென்றால் இளையராஜா ஒரு திமிர் பிடித்தவர், ஆணவக்காரர் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதிலும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வெளிப்படையாகவே பல புகார்களை கூறி சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இளையராஜா தற்போது பொறுத்தது போதும் என பொங்கி எழுந்துள்ளார்.

Also read: இளையராஜா மேல் இருக்கும் தவறான பிம்பம்.. உண்மையை போட்டு உடைத்த இயக்குனர்

அதாவது தன்னை பற்றி வரும் புகார்களுக்கு அவர் பதிலடி கொடுக்கும் வகையில் பேசி இருக்கிறார். என்னவென்றால் எனக்கு தலைகணம் என்று சொல்பவர்களுக்கு எவ்வளவு தலைகணம் இருக்க வேண்டும். என்னை பற்றி வரும் இது போன்ற குற்றச்சாட்டுகளை நான் கருத்தில் கூட கொள்வது கிடையாது.

நான் இசையுடன் மட்டும் தான் போட்டி போடுவேன். என்னுடைய பார்வை உண்மையை மட்டுமே பார்க்கும். வேறு எதைப் பற்றியும் எனக்கு கவலை கிடையாது என்று கூறியுள்ளார். இதன் மூலம் தன்னை பற்றி விமர்சிப்பவர்களை எல்லாம், நீங்க எனக்கு ஒரு ஆளே கிடையாது என்று சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் இசை ஞானி.

Also read: அஜித்தின் வாழ்நாள் ஆசை நிறைவேறியது.. அதைப்போல் கனவை நிறைவேற்ற துடிதுடிக்கும் இளையராஜா

Trending News