திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மேடையிலேயே பிரபல இயக்குனரை அவமதித்த இளையராஜா.. ஆணவத்தின் உச்சிக்கு சென்ற சம்பவம்

இளையராஜா கடுமையான கோபக்காரர் என்று பலர் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம். பிரபல இயக்குனரை மேடையிலேயே அவமானப்படுத்தும் அளவிற்கு ஆணவத்தின் உச்சிக்கே சென்ற சம்பவம் தான் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பல மொழிகளில் எண்ணற்ற பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்போது வரை அவரது பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் தான். இந்நிலையில் இளையராஜா, வைரமுத்து, பாரதிராஜா மூவரும் ஒரு படத்தில் இணைந்தால் அந்த படம் சூப்பர் டூப்பர் கிட்ட தான். அப்படி பல படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றி உள்ளனர்.

Also Read : கமலின் சூப்பர் ஹிட் படத்தை இயக்க மறுத்த பாலச்சந்தர்.. பிரிவியூ ஷோ பார்த்துட்டு இளையராஜா விட்ட சபதம்

யார் கண் பட்டதோ ஒரு காலத்தில் இந்த மூவர் கூட்டணியும் பிளவுபட்டது. மேலும் பாரதிராஜா மற்றும் இளையராஜா இடையே பல வருடங்களாக இந்த பிரிவு தொடர்ந்து வருகிறது. ஒரு கட்டத்தில் வயதாக இந்த பிரச்சனை சரியாகிவிடும் என எல்லோரும் நம்பி வந்தனர்.

ஆனால் அது சரியாகவே இல்லை. ஏனெனில் சமீபத்தில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பஞ்சு அருணாச்சலத்தின் 50 வருட சினிமா வாழ்க்கையை முன்னிட்டு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சினிமாவில் முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Also Read : ஆல் ரவுண்டராக இருக்கும் இளையராஜாவின் வாரிசு.. விரைவில் கொடுக்கப் போகும் புது அவதாரம்

அந்த வகையில் இவ்விழாவில் இளையராஜா மற்றும் பாரதிராஜா இருவருமே கலந்து கொண்டனர். அப்போது பஞ்சு அருணாச்சலம் கண்ணதாசனிடம் சில காலம் உதவியாளராக பணியாற்றினார். அதை குறிப்பிடும் வகையில் இளையராஜா பேசும்போது அடுத்த கண்ணதாசன் பஞ்சு அருணாச்சலம் தான் என்று கூறியிருந்தார்.

அடுத்ததாக ஒவ்வொருவராக பேசி முடிக்க இயக்குனர் இமயம் பாரதிராஜா பேச ஆரம்பித்தார். அப்போது ஒரு மிகப்பெரிய மேடையை அவமதிப்பது போல இளையராஜா நிகழ்ச்சியை விட்ட வேகமாக வெளியேறி விட்டார். இப்படி இளையராஜா ஆணவத்துடன் நடந்து கொள்கிறாரே என்று பலரும் அந்த விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

Also Read : பதுங்கியிருக்கும் புலி.. பொன்னியின் செல்வனால் சரியான திட்டம் தீட்டி காத்திருக்கும் பாரதிராஜா

Trending News