சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

7 ஸ்டார் ஹோட்டல் சூட் ரூமில் தான் பாட்டு வருமாம்.. இளையராஜா கால் தூசுக்கு பெறாத இசையமைப்பாளர்கள்

Ilayaraja: இசையமைப்பாளர் இளையராஜா ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இந்திய சினிமாவில் இசையமைத்திருக்கிறார். இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் எந்த செலவும் வைக்காமல் இசையமைப்பதில் இவர் திறமையானவர். மேலும் பாடல்களுக்காக காக்க வைக்காமல் சொன்ன தேதியில், சொன்ன நேரத்தில் பாட்டுகளை மெட்டி சேர்த்து கொடுத்து விடுவாராம். பிசியாக இருந்த காலத்தில் கூட இப்படித்தானாம்.

அதிலும் ஒரு படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்றால் ஒரே நாளில் இயக்குனர்களை வரச் சொல்லி, ஐந்து பாடல்களுக்கும் மெட்டிசைத்து கொடுத்து விடுவாராம். அதே போன்று பாடல்களுக்கு இசையமைப்பது என்றால் அவருடைய ஸ்டூடியோவுக்கு மட்டுமே நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை வரவழைப்பது மட்டுமே இவருடைய வழக்கமாக இருந்திருக்கிறது.

Also Read:விஜய்க்கு செய்யாததை ரஜினிக்காக செய்த அனிருத்.. ஹைப்பை ஏற்றிய ஜெயிலர்

அந்த காலத்தில் இருந்த தொழில்நுட்பங்களை விட, இந்த காலத்தில் இசையமைப்பதற்கு தொழில் நுட்பங்கள் இன்னும் அதிக முன்னேற்றத்துடன் இருக்கிறது. இருந்தாலும் இன்றைய இசையமைப்பாளர்கள் ஒரு படத்திற்கு இசையமைப்பதற்குள் ஓவர் அலப்பறையை கூட்டுவதோடு, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை அலைக்கழித்து விடுகிறார்கள்.

செவன் ஸ்டார் ஹோட்டலில் சூட் ரூமில் தான் இசையமைப்பேன் என்று அடம்பிடிக்கும் இசையமைப்பாளர்கள் கூட இப்போது இருக்கிறார்கள். இந்த பாடலுக்கு வெளிநாடு சென்று அங்கே இருந்து கொண்டே இசை அமைத்தால்தான் சரியாக இருக்கும் என்று சொல்லி தயாரிப்பாளர்கள் காசு இல்லையே வெளிநாட்டிற்கும் சென்று வந்து விடுகிறார்களாம்.

Also Read:வேட்டையாடு விளையாடு பார்த்து இன்று ரீ-ரிலீஸ் ஆன 10 படங்கள்.. பாபாவில் விட்டதை தட்டி தூக்க திட்டமிட்ட ரஜினி

இசை அமைப்பதற்கு வெளிநாடு செல்லும் இசையமைப்பாளர்கள், தங்களுடைய குடும்பத்தையும் சேர்த்து தங்களோடு கூட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள். அவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்திற்கு மொத்த செலவும் செய்வது தயாரிப்பாளர்கள் தான். படத்திற்கு இசையமைக்கிறேன் என்ற பெயரில் தயாரிப்பாளர்கள் காசில் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

இசையமைப்பாளர்கள் ஜிவி பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் போன்றவர்கள் இப்படித்தான் தயாரிப்பாளர்களை போட்டு பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் இருக்கும் ஸ்டுடியோவில் ஒரே நாளில் இசையமைப்பாளர் இளையராஜா மெட்டிசைத்த ஐந்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து இருக்கிறது. அப்படி இருக்கும்போது இந்த இசை அமைப்பாளர்கள் அடிக்கும் கூத்து இதற்கு இளையராஜா தான் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்ற வைக்கிறது.

Also Read:விஜய் குட்டி ஸ்டோரியை வைத்து பதிலடி கொடுப்பதற்கு நாள் குறிச்சாச்சு.. பிரம்மாண்டமாக வரவுள்ள லியோ ஆடியோ லான்ச்

Trending News