Ilayaraja issued notice to Coolie movie: ‘ நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று சில விஷயங்களில் சீறிப்பாய்கிறார் இளையராஜா. நம் ப்ளே லிஸ்ட் முழுவதும் நிறைந்திருக்கும் இவரை சில நேரங்களில் வெறுக்கவும் முடியவில்லை, ஆதரவு தெரிவிக்கவும் முடியவில்லை.
இருந்தாலும் சில நேரங்களில் அவர் செய்யும் விஷயங்கள், பாரபட்சம் நிறைந்ததாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது. திறமை இருக்கும் இடத்தில் கொஞ்சம் திமிரும் இருக்கும் என்று சொல்வார்கள். அப்படிப்பட்டவராக இருந்தால் கூட அவரை ஏதோ ஒரு அளவுக்கு சகித்துக் கொள்ளலாம்.
ஆனால் மனுஷன் ஒரு படி மேலே தாண்டி போய் நான் தான் எல்லாமே என்று பேசுவது தான் சகிக்க முடியவில்லை. இளையராஜா தன்னுடைய பாடல்களை தன்னுடைய உரிமை இல்லாமல் யாருமே பாடக்கூடாது என வழக்கு தொடர்ந்து வருவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
கச்சேரிகளில் கூட தன்னுடைய பாடல்களை பாடக்கூடாது என தடை விதிக்க கோர்ட் வரைக்கும் போனார். இதனால் நிறைய நல்ல நண்பர்களை கூட அவர் பிரிய நேரிட்டது. ஒரு சில நேரங்களில் மேடையில் பிரபலங்களை முகம் சுண்டி பேசுவது அவர்களுக்கே மனக்கசப்பான உணர்வை தந்துவிடும்.
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. இசைக்கு இளையராஜா உரிமை கூறினால், அப்போ அந்த இசைக்கு வரிகள் போட்டவர்களும் உரிமை கோரலாம் தானே என கோர்த்து திருப்பி கேள்வி கேட்டது.
இருந்தாலும் மனுஷன் அமைதியாக இருக்கப் போவதே இல்லை. சர்ச்சைக்கு அடுத்த அடித்தளம் போட்டு விட்டார். இந்த முறை அவர் வம்புக்கு இழுத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினியை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்தின் பார்ட்டி சாங் சமீபத்தில் வெளியானது.
இதில் ரஜினி நடித்த படத்தின் பாடல் வா வா பக்கம் வா உபயோகப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கு இசையமைத்தவர் இளையராஜா. தன்னுடைய உரிமை இல்லாமல் தன்னுடைய பாட்டை மறு உருவாக்கம் செய்திருந்தாலும் அது தவறுதான் என நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
என்ன அவர் ரஜினியுடன் இருக்கும் நட்பை கூட மறந்துவிட்டு இப்படி பண்ணி இருக்கிறாரே என தோன்றுகிறது. அதே நேரத்தில் இவர் ஏன் இந்த விஷயத்தை கமலுக்கு பண்ண வில்லை என்று கேள்வியும் எழுகிறது.
சமீபத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் மூலம் மீண்டும் கண்மணி அன்போடு பாடல் இரண்டானது. உலகநாயகன் கமலஹாசன் கூட அந்த பட குழுவை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். அக்கட தேசத்து படம் ஒன்றில் தன்னுடைய பாடல் உபயோகப்படுத்தப்பட்டு கோடிக்கணக்கில் வசூலை அள்ளிக் கொண்டு இருக்கிறது.
ஒரு வேளை இளையராஜாவுக்கு இந்த விஷயம் தெரியாமல் இருக்குமோ என்னவோ. ட்ரெண்டான அந்த பாட்டை விட்டுவிட்டு இப்போதுதான் கவனிக்கப்பட்டு வரும் கூலி பட பாடலுக்கு கேஸ் போட்டு இருக்கிறார். இதை பார்க்கும் போது ஒரு கண்ணில் வெண்ணையும், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது போல் இருக்கிறது.