தமிழ் சினிமாவை பொருத்தவரை எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும் இளையராஜாவின் இசைக்கு ஈடு இணை யாரும் கிடையாது. இவருடைய பாட்டுக்கு அத்தனை பேரும் அடிமைகள். அந்த காலத்தில் இசையால் அனைவரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்தவர். இப்பொழுதும் கூட இவருடைய பாடல்களை கேட்டால் கவலைகளை மெய்மறக்க செய்து விடும். அந்த அளவிற்கு பெருமைக்குரியவர். அப்படிப்பட்ட இவர் பல சர்ச்சைகளில் சிக்கிருக்கிறார்.
அதாவது எந்த அளவிற்கு இவரிடம் இசைஞானம் இருக்கிறதோ அந்த அளவிற்கு கர்வமும் தலைக்கனமும் அதிகமாக இருக்கிறது என்று பலரும் இவரை விமர்சித்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இவர் நண்பர் விஷயத்தில் கூட அஜாக்கிரதையாக இருந்திருக்கிறார். அதாவது மலேசியா வாசுதேவன் இவரும் மிக நெருங்கிய நண்பர்கள். அவர் வளர்ந்ததற்கே இளையராஜா தான் முக்கியமான காரணம். அதனால் எப்போதுமே அவர் மீது தனி மரியாதையுடன் இருந்தார்.
Also read: சாமினு அழைத்தால் சாமி ஆகிவிடுவாரா.! ஓவர் ஹெட் வெயிட்டில் இரங்கல் செய்தி பதிவிட்ட இளையராஜா
ஆனால் மலேசியா வாசுதேவன் கடைசி காலத்தில் வாய்ப்புகள் இல்லாமல் நண்பர்கள் உதவியும் இல்லாமல் கஷ்டப்பட்டு தான் இருந்தேன் என்று அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.இவருடைய கடைசி காலத்தில் கஷ்டப்பட்டு இறக்கும் தருவாயில் 10 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருடைய கடைசி ஆசையாக இளையராஜாவை பார்த்து பேச வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
இதற்காக இவரது மகன் யுகேந்திரன் மற்றும் இவர்கள் குடும்பம் அனைவரும் இளையராஜாவை சந்திக்க எப்படியோ முயற்சி செய்து விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள். இதனால் தன்னுடைய நண்பன் எப்படியும் நம்மளை பார்க்க வருவான் என்ற நம்பிக்கையில் கடைசி நிமிடம் வரை காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கடைசியில் அவருக்கு ஏமாற்றமாக தான் முடிந்திருக்கிறது.
Also read: மனோபாலாவை பற்றி இளையராஜா சொன்னதெல்லாம் சுத்த பொய்.. முகத்திரையை கிழித்த பிரபலம்
கடைசிவரை இளையராஜா வரவே இல்லை. உயிர் போகும் கடைசி அந்த நாளில் இளையராஜா வேகமாக வந்திருக்கிறார் ஆனால் அதற்குள் மலேசியா வாசுதேவன் உயிர் பிரிந்து விட்டது. இதனால் விரக்தியில் இவருடைய மகன் இளையராஜாவை பார்த்ததும் எதற்காக இப்பொழுது வந்தீர்கள் என் அப்பா இறந்துவிட்டார். அவருடைய கடைசி ஆசை கூட நிறைவேற்றவில்லை தயவு செய்து இங்கே இருந்து போய் விடுங்கள் என்று வருத்தத்தில் கோவப்பட்டு பேசி இருக்கிறார்.
அதன் பின் இளையராஜா குற்ற உணர்ச்சியில் அவருடைய இறுதி சடங்கு முடியும் வரை கூடவே இருந்து எல்லா விஷயத்தையும் பார்த்து இருக்கிறார். மேலும் உங்கள் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை நான் செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் கோபத்தில் இருந்த அவருடைய மகன் உங்கள் உதவிகள் எதுவும் எனக்கு தேவை இல்லை என்று அதை மறுத்திருக்கிறார். இதைப்பற்றி இவர் ஒரு பேட்டியில் மிக வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.
Also read: இரட்டை அர்த்த வரிகளை பார்த்து முகம் சுழித்த பாடகி.. பாட முடியாதா என ரோஸ்ட் செய்த இளையராஜா