சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

முரட்டு நாயகனை புறக்கணித்த இளையராஜா.. படத்தைப் பார்த்து வாயடைத்துப் போன இசைஞானி

Ilayaraja who ignored the rough hero: ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அந்த படத்தில் வரும் பாடல்கள் தான். அப்படிப்பட்ட அந்த பாடலுக்கு உயிரோட்டமாக இருப்பது இசை. இசையால் நம் அனைவரையும் கட்டி போட்டவர் தான் இசைஞானி இளையராஜா. அந்த காலத்தில் மட்டுமல்ல இப்பொழுது வரையும் இவருடைய பாடல்களை கேட்டால் எல்லா கவலைகளையும் மறந்து சொர்க்கத்திற்கு சென்ற மாதிரி ஒரு உணர்வை கொடுக்கும்.

அதனால் தான் இவருடைய கால் சீட்டுக்காக பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தவமாக இருந்து காத்திருந்திருக்கிறார்கள். ஏனென்றால் சில படங்களின் கதை சரியாக அமையாமல் இருந்தால் கூட இவருடைய இசையால் அந்த படமே மக்களிடம் ரீச் ஆகிவிடும். அப்படிப்பட்ட இவருடைய இசைக்காக முரட்டு நடிகரும் தவமிருந்து இருக்கிறார்.

அவர் வேறு யாருமில்லை நடிகரும் தயாரிப்பாளருமான ராஜ்கிரன் தான். இவர் முதலில் ராமராஜன் நடிப்பில் வெளிவந்த என்ன பெத்த ராசாவே என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் அறிமுகமானார். அதன் பின்னர் கஸ்தூரிராஜா இயக்கத்தில் என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் ஹீரோவாக அடி எடுத்து வைத்தார். அத்துடன் இப்படத்திற்கு தயாரிப்பாளரும் இவர்தான்.

Also read: அப்படி என்ன செய்தார் இளையராஜா.? பவதாரணியின் இறப்புக்கு கங்கை அமரன் வராத காரணம்

அதனால் இதற்கு இசையமைப்பாளராக இளையராஜா தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். அதற்காக இளையராஜாவின் வீட்டு வாசலில் கிடையாகக் கிடந்து காத்திருந்திருக்கிறார். ஆனால் இளையராஜாவோ இவரை பெருசாக பொருட்படுத்தாமல் அப்படியே புறக்கணித்து இருக்கிறார். அதன் பின் இளையராஜாவிடம் அவருடைய நண்பர் வாலி கூறியது என்னவென்றால் முதலில் அந்த படத்தின் கதையை போய் பார். அதன் பிறகு என்ன வேண்டுமானாலும் முடிவு பண்ணு என்று கூறி இருக்கிறார்.

அத்துடன் இளையராஜாவை வலுக்கட்டாயமாக வாலி படத்தை பார்க்க வைத்திருக்கிறார். படத்தை பார்த்ததும் இளையராஜா அப்படியே வாயடைத்து போய் மிரண்டு விட்டாராம். அந்த அளவிற்கு கதை இளையராஜாவின் மனதை தொட்டிருக்கிறது. பிறகு இளையராஜா எதுவுமே சொல்லாமல் அந்த படத்திற்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார்.

மேலும் இந்த படத்தின் கதையுடன் சேர்ந்து பாடலும் மக்களை கவர்ந்திருக்கிறது. இதனை தொடர்ந்து ராஜ்கிரண் அவருடைய படங்கள் அனைத்தும் இளையராஜாவே இசை அமைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறார். அந்த வகையில் இவர்களுடைய காம்போவில் வந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆகி வெற்றி பெற்றிருக்கிறது.

Also read: கடைசி நேரத்தில் பவதாரணி சந்தித்த சோதனைகள்.. பாசத்தால் பதறிப் போன இளையராஜா

- Advertisement -spot_img

Trending News