வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஏ ஆர் ரகுமானுக்கு இளையராஜா செய்த துரோகம்.. பல வருடம் கழித்து வெளிவந்த ரகசியம்

இளையராஜா மெட்டுகளின் அரசன் என்றே சொல்லலாம். 1976ல் தொடங்கிய இவரது இசைப்பயணத்தில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து விட்டார். இன்றைய தலைமுறை வரை இவரது பாட்டை ரசித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிப் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் பயிற்சி பெற்றவர்.

இளையராஜாவுக்கு எந்த அளவுக்கு திறமை இருக்கிறதோ அந்த அளவுக்கு கர்வமும், ஈகோவும் இருக்கிறது. இதனாலேயே இவர் ஒரு சில இயக்குனர்கள், பாடலாசிரியர்களுடன் இதுவரை பணியாற்றாமல் இருக்கிறார். இவர் இசையமைத்த காலத்தில் இவருடன் இருந்த பின்னணி இசை கலைஞர்கள் யாருமே மலரவில்லை. எஸ்பிபி, மனோ, ஜானகி, சித்ரா இவர்களை தவிர யாருக்கும் இவர் பாடும் வாய்ப்பையும் கொடுத்ததில்லை.

Also Read: இளையராஜா இசை அமைக்காத ஒரே நடிகரின் படம்.. 40 வருட சினிமா வாழ்க்கையில் நிகழ்ந்த ஆச்சரியம்

இசையுலகில் மிகப்பெரிய சென்சேஷனல், ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான், அவருடைய இசை பயணத்தை ஆரம்பித்ததே இளையராஜாவின் இசைக்குழுவில் பியானோ வாசிப்பவராக தான். ரோஜா படத்திற்கு முன்பு ஏ ஆர் ரகுமான், இளையராஜா இசையில் 500 பாடல்களுக்கு மேல் பணியாற்றியிருக்கிறார். இது நம்மில் பலருக்கும் தெரியாத ஒன்று.

ஏ ஆர் ரகுமான் தன் இசைக்குழுவில் புல்லாங்குழல் வாசிப்பவராக இருந்தாலும் அவர் பெயரை சினிமாவில் வர வைத்தார். ரகுமானுக்கு முதன் முதலில் ரோஜா படவாய்ப்பு கிடைத்த போது வெளிநாட்டிலிருந்து இசைக்கருவிகளை வரவழைத்தார். ஆனால் இளையராஜா தன்னுடைய புகழை பயன்படுத்தி 1 வருடம் கைக்கு கிடைக்காத படி செய்தார். காரணம் ரகுமான் சினிமாவில் வரக்கூடாது என்பதற்காக.

Also Read: இளையராஜா அதிகமாக இசையமைத்தது இவர் படத்துக்கு தான்.. ரஜினியை மட்டும் தவிர்த்த இசைஞானி

இதையெல்லாம் மீறி இன்று ஏ ஆர் ரகுமான் இந்திய சினிமாவை தாண்டி, உலக அளவில் பெயர் பெற்றுவிட்டார். உலக சினிமாக்களின் உயரிய விருதான ஆஸ்கர் விருது ரகுமான் கைகளில் வந்துவிட்டது. ரகுமான் தான் வளர்ந்தது மட்டுமில்லாமல் தன்னுடைய இசைக்குழுவில் இருக்கும் அத்தனை கலைஞர்களையும் வளர்த்து விட்டார்.

என்னதான் ஏ ஆர் ரகுமான் இளையராஜா குழுவில் பணியாற்றி இருந்தாலும், இதுவரைக்கும் இளையராஜாவிடம் ஏ ஆர் ரகுமான் பாடல்களை கேட்டு இருக்கிறீர்களா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வார். அந்த அளவுக்கு இளையராஜாவுக்கு கர்வம் உண்டு என கோலிவுட் வட்டாரமே சொல்லும், மேடைகளில் இருவரும் பேசிக் கொள்ளக்கூடிய தருணங்களில் கூட இளையராஜா ரகுமானிடம் ரொம்பவும் கர்வமாகவே தான் பேசுவார்.

Also Read: இளையராஜா பாஞ்சாயத்து கூட்டின 4 பெரும் புள்ளிகள்.. காதில் கூட கேட்காத ஏ ஆர் ரகுமான்

Trending News