வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தெலுங்குக்கு அப்பிட்டான இளையராஜாவின் குடும்பம்.. மோத விட்டு வேடிக்கை பார்க்கும் வெங்கட் பிரபு

மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சில காலங்கள் பிரேக் எடுத்திருந்த வெங்கட் பிரபு தற்போது அடுத்த பட வேலைகளில் பிஸியாகிவிட்டார். அவர் இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் படத்தை பரபரப்பாக இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடித்து வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடிக்கிறார்.

Also Read: வெங்கட்பிரபு தாராள மனசுக்கு வந்த தலைவலி.. இயக்குனர்கள் வயிற்றில் அடித்த பரிதாபம்

எனவே கதையின் மிக முக்கியமான ஆக்சன் காட்சிக்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு அதில் அரவிந்த்சாமி மற்றும் நாகார்ஜுனா இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றனர்.

இந்தப் படத்தின் ஆக்சன் காட்சிகள் மகேஷ் மாத்யூ மேற்பார்வையில் படமாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கீர்த்தி செட்டி, சரத்குமார் மற்றும் சம்பத்ராஜ் ஆகியோரும் இந்த ஷெட்யூலில் பங்கேற்றுள்ளனர்.

Also Read: வெங்கட் பிரபு சூட்டிங் ஸ்பாட்டை அடித்து நொறுக்கி மக்கள்.. அக்கட தேசத்தில் செய்த சேட்டை

முதல் முதலாக தெலுங்கு படத்தை இயக்கும் வெங்கட் பிரபு படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் பார்த்து பார்த்து படமாக்கிக் கொண்டிருக்கிறார். இவர் மட்டுமல்ல இவருடைய குடும்பத்தையே தெலுங்கிற்கு இழுத்திருக்கிறார்.

ஏனென்றால் இன்னும் இந்தப் படத்தின் டைட்டில் உறுதியாகாத நிலையில் படத்தை இசைஞானி இளையராஜா தன்னுடைய மகனுடன் இணைந்து இசையமைக்கிறார். ஆகையால் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து பணியாற்றும் இந்த படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டாக உள்ளது.

Also Read: அதிரடி ஆட்டத்திற்கு தயாரான விஜய்.. கேப்டனாக இருந்து வழிநடத்தும் வெங்கட் பிரபு

Trending News