வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இளையராஜா உருகி உருகி காதலித்த பெண்.. வேண்டாவே வேண்டாம் என ஊரை விட்டு ஓடிய சம்பவம்

இசைஞானி இளையராஜா தன்னுடைய இசையால் கோடிக்கணக்கான இசை ரசிகர்களை கட்டி வைத்திருக்கிறார். கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேலான பாடல்களுக்கு இசையமைத்த இவர் மூன்று தலைமுறைகளை கடந்து இன்றும் இந்திய இசை உலகின் முடி சூடா ஜாம்பவானாக இருக்கிறார் சமீபத்தில் இவர் இசையில் வெளியான விடுதலை படத்தின் பாடல் இன்று ஒட்டுமொத்த சமூக வலைத்தளத்தையும் ஆட்சி செய்து வருகிறது.

காதல், நட்பு, குடும்ப பாசம், திருவிழாக்கள் என அத்தனை உணர்வுகளுக்கும் இளையராஜாவின் பாடல்கள் இருக்கும். புதிதாக காதலிப்பவர்களுக்கு காதல் பாடல்களாக இருக்கட்டும், காதலில் தோற்றவர்களுக்கு காதல் வலியை மறக்கக்கூடிய பாடல்களாக இருக்கட்டும் அது இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்களாக தான் இருக்கும். இப்படி உருகி உருகி மெட்டமைத்த இளையராஜாவின் வாழ்க்கையில் சொல்லப்படாத நிறைவேறாத காதல் கதையும் இருந்திருக்கிறது.

Also Read:இரண்டு மணி நேரத்தில் 7 பாடல்கள் இசையமைத்த இளையராஜா.. மொத்த பாடலும் சூப்பர் ஹிட் ஆன படம்

இளையராஜாவுக்கும், ஜீவா என்பவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரணி என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். மூவருமே இசை துறையில் தான் இருக்கிறார்கள். மனைவி ஜீவா சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களின் திருமணத்திற்கு முன்பே இளையராஜா ஒரு பெண்ணை காதலித்திருக்கிறார்.

1970 இல் இளையராஜா காயத்ரி வீணா என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்திருக்கிறார். அந்தப் பெண்ணும் இசை கலைஞர் தானாம். வீணை வாசிப்பதில் சிறந்தவராக விளங்கி இருக்கிறார். அவருடைய இசை திறமையை கண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவருக்கு இசை துறையில் முக்கிய பொறுப்பை வழங்கி இருக்கிறார்.

Also Read:பின்னணி இசையால் வந்த பஞ்சாயத்து.. இளையராஜா, பாலச்சந்தர் மோதலுக்கு காரணமான படம்

இளையராஜா அந்தப் பெண்ணிடம் தன் காதலை நேரடியாகவே தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்தப் பெண்ணோ இளையராஜாவின் காதலை மறுத்துவிட்டாராம். அதன் பின்னரும் தொடர்ந்து அவர் அந்த பெண்ணை உருகி உருகி காதலித்திருக்கிறார். ஆனால் காயத்ரி வீணா தன்னுடைய சமூகத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் குடியேறி விட்டாராம்.

அதன் பின்னர் இளையராஜாவும் பல படங்களுக்கு இசையமைத்து மிகப்பெரிய வெற்றியமைப்பாளராக மாறினார். அந்த பெண்ணும் கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு தான் இந்தியாவுக்கு திரும்பினாராம். தன்னுடைய காதல் பாடல்கள் ரசிகர்களை வசீகரித்த இளையராஜாவுக்கு இப்படி ஒரு நிறைவேறாத காதலும் இருந்திருக்கிறது.

Also Read:உச்சத்தில் இருந்த போதே அடம்பிடித்து வாய்ப்பு கேட்ட இளையராஜா.. எம்எஸ்வி விட்டுக் கொடுத்ததால் செம ஹிட்

Trending News