செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

Vairamuthu : பாட்டு வரிகள் படத்திற்கு பலம்.. கங்கை அமரன் பேச்சுக்கு வைரமுத்து பதிலடி?..சூடு பிடித்த சண்டை!

இளையராஜா இசையில் வைரமுத்துவின் பாடல் வரிகளில் 80 மற்றும் 90களில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெற்றி பெற்றது. இப்போதும் இந்தப் பாடல்களை ரசிகர்கள் விரும்பி கேட்டு வருகிறார்கள். ஆனால் இளையராஜா மற்றும் வைரமுத்து இடையே மன கசப்பு ஏற்பட்டது.

இளையராஜா, இசை இல்லை என்றால் பாடலே இல்லை ஆகையால் எனது பாடலுக்கு காப்புரிமை வேண்டும் என்ற வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த சூழலில் சமீபத்தில் படிக்காத பக்கங்கள் என்ற விழாவில் பேசிய வைரமுத்து இளையராஜாவை விமர்சிக்கும் படி பேசி இருந்தார்.

அதாவது பாடல் பெரிதா இசை பெரிதா என்று வாக்குவாதமே நடந்தது. இதைத்தொடர்ந்து இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் ஆவேசமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். தம்பி உடையான் படைக்க அஞ்சான் என்பது போல இளையராஜாவுக்காக பேசி உள்ளார் அமரன்.

வைரமுத்துவை விமர்சித்த இளையராஜாவின் தம்பி கங்கை அமரன்

அதாவது வைரமுத்து நல்ல திறமையானவர் என்பதை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் நல்ல மனுஷனே கிடையாது. பாடலாசிரியர் என்று வைரமுத்துக்கு ஒரு அடையாளம் கொடுத்ததை இளையராஜா தான். சினிமாவில் வைரமுத்துவை வளர்த்து விட்டவரை நன்றி மறந்து இப்படி பேசக்கூடாது.

இனி வாய பொத்திகிட்டு இருக்கணும் என எச்சரித்திருக்கிறார். இவ்வாறு இளையராஜாவுக்காக பொங்கி எழுந்து கங்கை அமரன் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பூதாகராம் எடுத்து இருக்கிறது.

மேலும் பாடல் வரிகள் தான் படத்திற்கே பலம் என்று கங்கை அமரன் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் வைரமுத்து. இவ்வாறு அனல் பறக்கும் சண்டையாக இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஆனால் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவருமே மிகப்பெரிய இமயமாக இருந்து வருகிறார்கள். ஒரு கவுரவமான இடத்தில் இருக்கும் இவர்கள் இதை சர்வ சாதாரணமாக எடுத்து செல்லலாம்.

ஆனால் ஈகோ பிரச்சனையால் ஒருவருக்கொருவர் அசிங்கப்படுத்திக்கொண்டு வாதங்கள் வைப்பது அவர்களது பெயருக்கு தான் களங்கம் விளைவிக்கிறது.

Trending News