வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அடுத்த கட்டத்துக்கு நகர முடியாமல் தவிக்கும் தனுஷ்.. விடாப்பிடியாய் வம்பு பண்ணும் இளையராஜா

மதுரையில் உள்ள தேனி மாவட்டத்தில் இட்லி கடை படத்தின் சூட்டிங் வேலைகளில் படு பிஸியாக கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.ராயன் படத்திற்கு பிறகு தனுஷ் கையில் எடுத்திருக்கும் ப்ராஜெக்ட் இது. இந்த படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் துபாயில் நடைபெற இருக்கிறது.

இதற்கிடையில் கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு இளையராஜாவின் பயோபிக் படத்தில் தனுஷ் கமிட்டாகி இருந்தார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குவதாக இருக்கிறது. இந்த ப்ராஜெக்ட் இதுவரை டேக் ஆப் ஆகாமல் ஜவ் மிட்டாய் மாதிரி இழுத்துக் கொண்டே போகிறது.

ஒரு பக்கம் தனுஷ் தன் வேலைகளில் பிசியாக இருந்தாலும் இளையராஜா வாழ்க்கை வரலாறு என்பதால் அவர் கூட சிறிது காலம் பயணித்து முழு கதைகளையும் கேட்டு தெரிந்து எடுக்க வேண்டும் என அருண் மாதேஸ்வரனும், தனுஷும் திட்டமிட்டு வருகிறார்கள். இதற்கு உண்டான வேலைகளையும் பார்த்து வருகிறார்கள்.

இந்த பயோக் படத்திற்கு இளையராஜா, அருண் மாதேஸ்வரனிடம் தன்னுடன் ஒரு வருடம் பயணிக்குமாறு கூறியுள்ளார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில முக்கியமான தகவல்களை கொடுப்பதாகவும் அதை குறிப்பு எடுக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார். அருண் மாதேஸ்வரன் தற்சமயம் இளையராஜாவுடன் பயணித்து வருகிறார்.

இன்னும் இந்த ப்ராஜெக்ட்டுக்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. அருண் மாதேஸ்வரனிடம் இருந்து முழு ஸ்கிரிப்ட் ரெடியாகவில்லை. அதனால் எப்படி பார்த்தாலும் இன்னும் ஒரு வருடம் இந்த படம் டேக் ஆஃப் ஆவதில் சிரமம் தான். தனுஷ் இந்த படம் மிகவும் தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

Trending News