வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ராஜு தேம்பித் தேம்பி அழுதும் வெற்றியில் பங்கெடுக்காத போட்டியாளர்.. அவரே கொடுத்த விளக்கம்!

106 நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றுடன் நிறைவடைந்தது. இதில் மக்கள் அளித்த ஓட்டின் அடிப்படையில் டைட்டில் வின்னர் ஆக ராஜீ தேர்வு செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து பிரியங்கா இரண்டாம் இடமும், பாவனி மூன்றாம் இடமும் பெற்றனர்.

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் துவங்கப்பட்ட நாளிலிருந்தே பிக்பாஸ் வீட்டில் நண்பர்களாக இருந்த ராஜு மற்றும் இமான் அண்ணாச்சி இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இறுதி வரை செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடினர். ஆனால் இமான் அண்ணாச்சி நாமினேட் செய்யப்பட்டு எலிமினேட் செய்யப்பட்டார்.

இருப்பினும் இமான் அண்ணாச்சி வெளியில் செல்லும்போது, ராஜு நிச்சயம் செய்ய வேண்டும் என்று அவரிடம் சொல்லி ஊக்கபடுத்தி சென்றார். எனவே இமான் அண்ணாச்சி பிக்பாஸ் வீட்டில் ராஜீவுடன் அண்ணன் தம்பி போல் பழங்கியதற்கு கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் ராஜீவுடைய வெற்றியின் பங்கேற்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

வெளியில் செல்லும்போது யாருக்காகவும் அழாத ராஜு இமான் அண்ணாச்சிகாக தேம்பித் தேம்பி அழுதார். ஆனால் இமான் அண்ணாச்சி பினாலே நிகழ்ச்சிக்கு வரவில்லை. இதற்கு என்ன காரணம் என அவரிடம் கேட்டபோது, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து பட சூட்டிங் மற்றும் டப்பிங் வேலைகளில் பிஸியாக இருப்பதாகவும், இதனால் பொங்கலுக்கு கூட வீட்டிற்கு போக முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.

அத்துடன் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே பங்கேற்க வேண்டும் என்றால் 7 நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக இருந்ததால் ஷூட்டிங், டப்பிங் வேலையில் பரபரப்பாக அலைந்து திரிந்து கொண்டிருந்த என்னால் இதற்காக தனியாக நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால்தான் பினாலேவில் கலந்துகொள்ள முடியவில்லை என்று இமான் அண்ணாச்சி விளக்கம் அளித்துள்ளார்.

ராஜு டைட்டில் வின்னர் ஆனதற்கு சந்தோஷப்படும் முதல் ஆள் நான்தான் என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் காமெடியன் டைட்டில் வெற்றி பெற வேண்டும் என்று ராஜு பலமுறை சொல்லியதை செயல்படுத்தி உள்ளார் என்றும் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.

Trending News