சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

வெளியில் தலை காட்ட முடியாமல் தவித்த சிவகார்த்திகேயன்.. ஒரே வார்த்தையில் இமான் வைத்த முற்றுப்புள்ளி

Imman-Sivakarthikeyan: கடந்த சில வாரங்களாகவே சிவகார்த்திகேயன் பற்றிய சர்ச்சை தான் பெரும் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. நம்ம வீட்டு பிள்ளையாக அனைவர் மனதிலும் இடம் பிடித்த அவருடைய இமேஜ் மொத்தமும் டேமேஜ் ஆனதில் மனிதர் பாவம் வெளியில் தலை காட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

சாதாரணமாக சோசியல் மீடியா பக்கத்தில் அவர் ஒரு போட்டோவை பகிர்ந்தால் கூட அதில் ரசிகர்கள் படுமோசமான கமெண்ட்டுகளை கொடுத்து அவரை ஒரு வழி செய்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இமான் கொடுத்த ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கூறியது தான்.

அதை தொடர்ந்து மறைமுகமாக அவர் பேசிய பல விஷயங்கள் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி பல சினிமா ஆர்வலர்கள் கூட சிவகார்த்திகேயனின் ஒழுக்கம் பற்றி அபாயகரமான விஷயங்களை வெளியிட்டனர். அதிலும் இமான் மனைவியுடன் அவர் படுமோசமாக பேசிய வாய்ஸ் மெசேஜ் அனைத்தும் பத்திரமாக இருக்கிறது.

Also read: வேலியே பயிரை மேய்ந்தது.. இமான், சிவகார்த்திகேயன் பிரிவுக்கு காரணமாக நைட் பார்ட்டி, நடந்தது இதுதான்

அதெல்லாம் வெளிவந்தால் சிவகார்த்திகேயன் அவ்வளவுதான் என்று ரீதியில் பல விஷயங்கள் கிளம்பியது. இப்படி அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்திற்கு இமான் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது சமீபத்தில் அவர் ஒரு பட விழாவில் கலந்து கொண்ட போது பத்திரிகையாளர்கள் அவரிடம் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டனர்.

அதில் முக்கியமானது சிவகார்த்திகேயனின் சர்ச்சைக்கு அவர் சொல்லும் பதில் என்ன என்பது தான். அதற்கு இமான் அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொள்வார், எது சரி தப்பு என்று அவருக்கு தெரியும். இதில் முற்றுப்புள்ளி வைக்க ஒன்றும் இல்லை, அவர் வைப்பார் எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதிலிருந்தே இந்த விவகாரத்தில் அவர் எந்தவிதமான கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த அளவுக்கு அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். அது மட்டுமின்றி அவர் கூறிய இந்த வார்த்தை தற்போது பல நாள் பிரச்சனைக்கு ஒரு முடிவாக இருக்கிறது. இதன் பிறகாவது சிவகார்த்திகேயனின் தலை சோசியல் மீடியாவில் உருளாமல் இருக்கும்.

Also read: இமானுக்கு வந்த மிரட்டல்.. ஒரே வீடியோவால் காலியாக போகும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்

Trending News