கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை திறந்தாலே தேசிய விருது அறிவிக்கப்பட்டது தான் பேசு பொருளாக உள்ளது. தமிழ் சினிமாவில் தனுஷ், விஜய் சேதுபதி, இமான், பார்த்திபன் போன்றவர்களுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
தனுஷுக்கு அசுரன் படத்திற்கும், விஜய் சேதுபதிக்கு சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்ததற்கும், பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு படத்திற்கு 2 தேசிய விருதுகளும் மற்றும் விஸ்வாசம் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது இமானுக்கும் கிடைத்துள்ளது.
இந்நிலையில் அனைவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்களுக்கும் படங்களில் பணியாற்றியவர்களுக்கும் நன்றி கூறிய வண்ணம் உள்ளனர். அந்த வகையில் இமான் அஜித் படத்திற்கு கிடைத்த விருதுக்கு விஜய் வாழ்த்து சொல்லியதாக குறிப்பிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
விஸ்வாசம் படத்திற்கு கிடைத்த சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு தளபதி விஜய் போன் பண்ணி இமானுக்கு வாழ்த்துத் தெரிவித்தாராம். தல தளபதி இருவரும் தமிழ் சினிமாவில் சண்டை காரர்கள் என பலரும் பரப்பி கொண்டிருக்கையில் அஜித் படத்திற்கு விஜய்யும், விஜய் படத்திற்கு அஜித்தும் மாறி மாறி வாழ்த்து சொல்லுவது சகஜமாகி விட்டது.
விஸ்வாசம் படத்திற்கு விருது கிடைத்திருந்தாலும் இமான் தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்தது என்னமோ தளபதி விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம்தான். முதல் படத்திலேயே இமான் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் பயங்கர வெற்றி பெற்றது.
மேலும் அசுரன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்ததை விடவா இமான் விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்து விட்டார் என்ற பேச்சு கோலிவுட் வட்டாரங்களில் அதிகமாக எழுகின்றன. அந்த அளவுக்கு சிறப்பான இசை இல்லை என்றால் எதற்காக தேசிய விருது கொடுக்க வேண்டும் என்பதை கொஞ்சம் யோசித்தாலே இந்தப் பேச்சு தன்னால் அடங்கிவிடும்.