வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை – கொத்து கொத்தாக மாட்டும் அரசியல் புள்ளிகள்.. அடக்கொடுமையே! திமுக, அதிமுக, பாஜக கட்சி ஆட்கள் நிலை

Armstrong: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கு நாளுக்கு நாள் புதிய திருப்பத்தை சந்தித்து வருகிறது. ஒரு மாநில கட்சி தலைவரையே பொது இடத்தில் வைத்து கொலை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக ஒரு பக்கம் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் என்கவுண்டர், வீடியோ வெளியீடு என காவல்துறை தன் தரப்பு விஷயங்களை செய்து வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளிகள் உண்மையான கொலையாளிகளா என்பது சாமானிய மக்களின் தொடங்கி அரசியல்.

இந்த கொலை வழக்கு காரணம் காட்டி எதிர்க்கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும் கட்சி பாஜக போன்றவை ஆளும் கட்சியான திமுகவை கேள்வி எழுப்பி வந்தார்கள். இப்போ திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

ஆற்காடு சுரேஷ் கொலை பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த கொலை நடந்ததாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது திமுக, அதிமுக, பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

ஏற்கனவே திமுக நிர்வாகி சீனிவாசனை கைது செய்து விட்டார்கள். கொலையாளிகளுக்கு பைக் சப்ளை செய்தது, கொலை செய்யப்பட்ட ஆயுதத்தை மறைத்து வைக்க இடம் கொடுத்தது என. இவர் மீது நிறைய குற்றச்சாட்டுகள்.

இவருடன் தொடர்பில் இருந்த அதிமுக நிர்வாகி மலர்க்கொடி என்பவரும் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அதிமுக அவரை கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறது. மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் ஹரிஹரனும் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதால் அந்த கட்சி அவரை நீக்கி இருக்கிறது.

சமீபத்திய தகவல் படி ஏழு வழக்கறிஞர்கள் மற்றும் மூன்று ரவுடிகள் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். ஆம்ஸ்ட்ராங் என்னும் ஒரு சின்ன புள்ளியில் ஆரம்பித்த இந்த குற்றம் தற்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி இருக்கிறது.

கொத்து கொத்தாக மாட்டும் அரசியல் புள்ளிகள்

- Advertisement -spot_img

Trending News