பாபா ரீ-ரிலிஸில் மாற்றப்பட்ட முக்கியமான காட்சிகள்.. கிளைமாக்ஸில் வைத்த அதிரடி ட்விஸ்ட்

சினிமாவில் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது அவருடைய படு தோல்வி படமான பாபா படத்தை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் மீண்டும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் செய்திருக்கிறார்.

இதில் பாபா படத்தை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் மீண்டும் புதிதாக எடிட்டிங் மற்றும் கலர் கிராஃபிக் செய்யப்பட்டு ரஜினியும் மீண்டும் டப்பிங் பேசி உள்ளார். அதிலும் படத்தின் முக்கியமான காட்சிகள் மாற்றப்பட்டு கிளைமாக்ஸில் அதிரடி ட்விஸ்ட் வைத்திருக்கின்றனர்.

Also Read: 6 உச்ச நட்சத்திரங்களூடன் நடித்த ஒரே நடிகை.. கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஹீரோக்கள் விட்ட ஜொள்ளு

2002 ஆம் ஆண்டு வெளியா சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, விஜயகுமார், சுஜாதா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த திரைப்படம் அப்போதே பெரும் பரபரப்பை கிளப்பியது. தற்போது அதே போன்ற ஒரு பரபரப்பை இந்த ரீ ரிலீஸ் ஏற்படுத்தி இருக்கிறது.

அதில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். பழைய பாபா படத்தில் ஏழு மந்திரங்களுக்கு பதிலாக ஐந்து மந்திரங்கள் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது. அதுமட்டுமின்றி பழைய பாபா படத்தின் கிளைமாக்ஸில் பாபாவா? மக்களா? என்ற கேள்வி ரஜினியிடம் கேட்கப்படும், அதற்கு மக்கள் தான் என்று ரஜினி பதிலளித்து அவர் அரசியலில் வருவார் என்பதை உறுதிப்படுத்தினார்.

Also Read: மாண்டஸ் புயலை ஓரங்கட்டிய சூப்பர் ஸ்டார்.. 20 வருடங்களுக்கு பிறகும் வரலாறு படைக்குமா பாபா ரீ ரிலீஸ்?

அதன் பிறகு இப்போது ரஜினி அரசியலுக்கு குட் பாய் சொன்னதால் புதுப்பொலிவுடன் திரையிடப்பட்டிருக்கும் பாபா படத்தின் கிளைமாக்ஸ் முற்றிலுமாக மாற்றி உள்ளனர். படத்தின் கிளைமாக்ஸ் கதை என்ன என்பது தெரிந்திருக்கிறது. அதில் ரஜினி அம்மா சென்டிமென்ட் உடன் படத்தை முடித்து இருக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு ரஜினி ரசிகர்கள் ஆதரவு கொடுத்த வருகின்றனர். அத்துடன் ரஜினிகாந்த் வரும் 12ஆம் தேதி தன்னுடைய 72 ஆம் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். அதை ஒட்டி இன்று வெளியாகி உள்ள பாபா திரைப்படத்தை காண்பதற்காக ரசிகர்களின் கூட்டம் தியேட்டர்களில் அலை மோதி வருகிறது. அதிலும் முதல் காட்சியான காலை நான்கு மணி காட்சிகளை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர்.

Also Read: பாபா ரீ ரிலீஸில் இப்படி ஒரு அரசியல் சூழ்ச்சியா? பரபரப்பைக் கிளப்பி, உண்மை காரணத்தை உடைக்கும் பிரபலம்