திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

கோடி எண்ணங்க கோடி, வாக்கு தான் முக்கியம்.. ராஜமௌலி படத்தை உதறித்தள்ளிய பிரபலம்

பாகுபலி படங்களுக்கு பிறகு இந்திய அளவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்த ராஜமௌலி அடுத்ததாக ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) என்ற படத்தை இயக்கி வருகிறார். சுமார் 350 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரன் ஆகிய இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் நாயகியாக பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ளார்.

முன்னதாக அக்டோபர் மாதம் படத்தை ரிலீஸ் செய்யலாம் என படக்குழுவினர் திட்டமிட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்புகளை நடத்தி வந்த நிலையில் எதிர்பாராத விதமாக மீண்டும் படப்பிடிப்புகளை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் தற்போது பொங்கல் விடுமுறைக்கு சென்றுள்ளது இந்த திரைப்படம்.

இந்நிலையில் திடீரென RRR படத்திலிருந்து முக்கிய பிரபலம் விலகியதால் படக்குழுவினர் கவலையில் உள்ளனர். தெலுங்கு சினிமாவின் டாப் சண்டை பயிற்சியாளர்களாக வலம் வருபவர்கள் ராம் மற்றும் லட்சுமணன் என்ற இரட்டையர்கள்.

விஜய்யின் சர்கார் படத்திற்கு கூட இவர்கள் தான் சண்டை பயிற்சி செய்தனர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய முன்னணி நடிகர்களின் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர்கள் தான் ராஜமௌலியின் ரத்தம் ரணம் ரௌத்திரம் என்ற படத்திலும் பணியாற்றி வந்தனர்.

நினைத்த நேரத்தில் ராஜமௌலி படப்பிடிப்பை நடத்தி வருவதால் ஏற்கனவே பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்ட இவர்கள் இந்த படத்தில் இருந்து தற்போது விலகும் நிலைமை ஏற்பட்டு விட்டது. இதுகுறித்து சம்பளம் கூட சேர்த்து தருகிறோம் என்று தயாரிப்பு தரப்பு கேட்டுள்ளது. ஆனால் வாக்கு தான் முக்கியம் என நடையை கட்டிவிட்டார்களாம் இந்த இரட்டையர்கள்.

RRR-cinemapettai
RRR-cinemapettai

Trending News