வடிவேலு, கவுண்டமணி, செந்தில் போன்ற காமெடி நடிகர்கள் இப்போது இல்லையே என ரசிகர்கள் கவலைப்படும் அளவுக்கு இருக்கிறது தமிழ் சினிமா. காமெடி படங்கள் வெளிவருகிறதே தவிர அந்த படங்களில் காமெடி இல்லை.
வடிவேலு போல் உடல் மொழியில் காமெடி செய்யும் விஷயங்கள் அநியாயத்திற்கு அழிந்து போய்க் கொண்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. இப்போதெல்லாம் காமெடி என்றாலே இரட்டை அர்த்த வசனங்கள் தான்.
அதனால்தான் கடந்த நான்கு வருடங்களாக வடிவேலு சினிமாவில் நடிக்காமல் இருந்தாலும் அவரைப் பற்றிய செய்திகளும் மீம்ஸ்களும் ரசிகர்களை சிரிக்க வைக்கும்படி அமைந்தன. எப்படியாவது என்னுடைய தலைவனை வெளியே கொண்டு வந்து விடுங்கள் என ரசிகர்கள் கதறாத நாட்களே இல்லை.
அதற்கு ஏற்றார் போல் தற்போது அனைத்து தடைகளையும் உடைத்தெரிந்து மீண்டும் சினிமாவில் வலம்வரத் தொடங்கிவிட்டார் வடிவேலு. அந்த வகையில் அடுத்ததாக நாய் சேகர் என்ற படம் உருவாகியுள்ளது.
என்னதான் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுத்து பல படங்களை அறிவித்தாலும் நின்றுபோன இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் அந்த மாதிரி.
சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தை ரசிக்காதவர்களே கிடையாது. அந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்பட்ட போதுதான் வடிவேலுவின் தேவையில்லாத வேலைகள் படத்தை கைவிடும் சூழ்நிலைக்கு தள்ளிவிட்டது. இருந்தாலும் அந்த படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது என சிம்புதேவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளது ரசிகர்கள் மனதை குளிர வைத்துள்ளது.