சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

2024-ல் மலையாளத்தில் கண்டிப்பா பார்க்க வேண்டிய படங்கள் .. எல்லாம் வேற ரகம்

மலையாள சினிமா என்றாலே எல்லாருக்கும் வித்தியாசமான படங்கள், நல்ல கதை, திரைக்கதை, மேக்கிங் என்பது தான் ஞாபகம் வரும். ஒரு சிறிய கதையை வைத்து அழகாக படம் இயக்குவர். அந்த வரிசையில், இந்த 2024 – ல் வெளியான ஒவ்வொரு படமும் தரமான சம்பவம் செய்துள்ளன. சின்ன இன்டஸ்ட்ரியான மல்லுவுட்டில் ஒரு வருடத்தில் இத்தனை ஹிட் படங்கள் கொடுக்க முடியுமா? என வியக்க வைத்துள்ளன. அதில், டாப் 5 படங்களைப் பற்றி இதில் பார்க்கலாம்.

ஆவேசம்

ஜித்து மாதவன் இயக்கத்தில், ஃபகத் ஃபாசில் , பூஜா மோகன் ராஜ், ஹிப்ஸ்டெர், மிதுன் ஜெய் சங்கர், சஜின் கோபு ஆகியோர் நடிப்பில் உருவான படம் ஆவேசம். சுசின் சியாம் இசையமைத்தார். ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் ஐ.எம்.டி.பில் 10க்கு 7.8 ரேங்க் பெற்றுள்ளது. ஃபகத் ஃபாசிலின் கேரியரில் முக்கியமான படமாகவும் அமைந்துள்ளது.

மஞ்சுமல் பாய்ஸ்

சிதம்பரம் பொடுவல் இயக்கத்தில், சவுபின் சாஹிர், ஸ்ரீ நாத் பாசில், கலித் ரஹ்மான், தீபக் பரம்பொல், சந்துரு சலிம்குமார், பூஜா மோகன் ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவான படம் மஞ்சுமல் பாய்ஸ். பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானது இப்படம். கொடைக்கானல் செல்லும் நண்பர்கள் குழுவில் ஒருவர், குணா குகையில் சிக்கிக் கொள்ளும் போது என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாக படமாக எடுத்திருந்தனர். இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் குவித்து, சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

ஆடு ஜீவிதம்

பிளசி இயக்கத்தில், பிரத்விராஜ் , அமலா பால், ஜிம்மி ஜீன் லூயிஸ் நடிப்பில் உருவான படம் ஆடு ஜீவிதம் – தி கோட் லைஃப். இப்பட த்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். சவூதி அரேபியாவில், தனது விருப்பத்திற்கு எதிராக, ஆடுமேய்க்கும் வேலையில் பல கொடுமைகளுக்கு மத்தியில், பணியில் அமர்த்தப்ட்ட ஒரு மலையாள தொழிலாளியின் கதையாகும். அங்கிருந்து அவர் எப்படி தப்பி, தாய் நாடு வருகிறார் என்பதை சுவாரஸ்யமாக படமாக எடுத்திருந்தனர்.

பிரேமலு

கிரிஸ் ஏ.டி இயக்கத்தில், மமிதா பைஜீ, அகிலா பார்க்கவன், நெஸ்லன் கஃபோர், சங்கீத் பிரதாப் நடிப்பில் உருவான படம் பிரேமலு. இப்படம் பிப்ரவரி 9 ஆம் தேதி ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. வெறும் 9 கோடியில் எடுக்கப்பட்டு 100 கோடிக்கு மேல் வசூல் குவித்து இப்படம். இபடம் தமிழிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

வாழ

ஆனந்த் மேனன் இயக்கத்தில் மீனாட்சி உன்னிகிருய்ஷ்ண சிஜு சன்னி, ஜோமன் ஜோதிர், பாசில் ஜோசப் நடிப்பில் உருவான படம் வாழ. ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான இப்படம் எல்லோரின் வரவேற்பை பெற்றது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 40 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. தோல்வியடைந்த நான்கு நன்பர்கள், முதிர்வயதுக்குள் நுழையும்போது இச்சமூகத்தில் என்னென்ன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை.

இந்த 5 படங்கள் பாக்ஸ் ஆபீஸில் டாப் லிஸ்டில் இடம்பிடித்துள்ளன. அதுபோக, சூக்ஸ்மா தர்ஷினி, கிஷ்கிந்தா காண்டம், பிரேமயுகம், ஏ.ஆர்.எம், தலவன், குருவாயூர் அம்பலாண்டயில், ஆட்டம், Ullozhukku, வருஷங்களுக்கு ஷேயம் ஆகிய படங்களும் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News