வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஆளும் கட்சி எதிர்க்கட்சியின் 60% ஓட்டு விஜய்க்கு தான்.. அடித்து சொல்லும் அரசியல் சாணக்கியன் கணிப்பு

In 2026 election Vijay may be get success Prediction by Prashant Kishor: காலத்தின் கட்டாயத்தால் அரசியலில் கால் பதித்துள்ள தளபதி விஜய் அவர்கள் தனிப்பெரும் சக்தியாக மாறுகிறார்!என, தேர்தலில் தான் சார்ந்த கட்சியை ஜெயிக்க வைக்கும் அரசியல் சாணக்கியனும், மோடியின் அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் சில கணிப்புகளை கூறியுள்ளார்.

மாஸ்டர், வாரிசு, லியோ என கடந்த பல ஆண்டுகளாக தனது இமேஜை பயன்படுத்தி ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வரும் தளபதி பல்லாண்டு காலமாக அரசியலில் கால் பதிப்பது குறித்து பல அண்டர்கிரவுண்ட் வேலைகளை செய்து வந்துள்ளார்.

தளபதியின் ஒவ்வொரு படத்தின் ரிலீஸ் போதும் சில அரசியல் கட்சிகள் இவர் தமக்கு எதிராக செயல்படுகிறாரோ என்று அவரது படங்களை ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்க, இவரோ! அரசியல் கட்சிகள் இவ்வாறு செய்கிறார்களே என்று அடுத்தடுத்த படங்களில் அரசியலில் தனக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியை படங்களின் வழியே வெளிப்படுத்துவது என இது தொடர்கதையாகி வந்தது.

Also read: விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பிரச்சனைல மாட்டிவிடும் 5 விஷயங்கள்.. இதுக்கு சரின்னா அடுத்த முதல்வர் விஜய் தான்

ஒரு கட்டத்தில் இளைய தளபதி  கத்தி, மெர்சல், சர்க்கார் போன்ற படங்களின் வாயிலாக வெளிப்படையாகவே அரசியல் கட்சிகளுக்கு எதிராக தனது கருத்துக்களை பதிவு செய்ய ஆரம்பித்தார். மோதல் முற்றவே தமிழக வெற்றிக் கழகம் என தனது கட்சியை பகிரங்கமாக அறிவித்து  நடைமுறையில் இருக்கும் கட்சிகளுக்கு  பயத்தை காட்டினார்.

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசை ஆட்சி பொறுப்பு ஏற்க வைத்ததும் தேர்தலில் வெற்றி பெற வைத்ததிலும் பிரசாந்த்கிஷோரின் பங்கு அளப்பரியது.  தேர்தல் அறிக்கை, மாநாடு, சோசியல் மீடியாவில் கட்சியை பிரபலப்படுத்துவது என மொத்தத்தையும் பிளான் பண்ணி அரங்கேற்றுவதில் தந்திரக்காரர் இந்த பிரசாந்த் கிஷோர்

தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரசாந்த் கிஷோரை சந்திப்பதாக விஜய் தரப்பில் தகவல் பரவியதை அடுத்து, பிரசாந்த் கிஷோர் “விஜய் என்னிடம் உதவி கேட்டால் அவருக்கு அட்வைஸ் கொடுப்பேன், முழு நேர ஆலோசராக மாற மாட்டேன்” என்று பதில் அளித்து உள்ளார். அதனைத் தொடர்ந்து  தளபதி மற்றும் அவரது கட்சி பற்றி பேசிய பிரசாந்த்,

திமுக மற்றும் அதிமுக இவர்களுக்கு மாற்றாக ஒரு மாபெரும் சக்தியாக விஜய் உருவெடுத்துள்ளார் எனவும், இவர் தேர்தலில் போட்டியிடும் போது இந்த இரு கட்சிகளுக்கும் எதிராக மாற்றத்தை விரும்புபவர்கள் இவரை தேர்ந்தெடுக்க கூடும் என்பதால் திராவிட கட்சிகளின் ஓட்டு எண்ணிக்கை 60% முதல் 80% வரை குறையலாம் என்றும் கூறியுள்ளார். பாஜக முன்னணியில் வந்தால் கூட விஜய்  நினைக்கும் பட்சத்தில் பாஜகவை முன்னேற விடாது தனிப்பெரும் ஆளுமையாக உருவெடுக்கலாம் ஆனால் இதற்கெல்லாம் முதலில் விஜய் மக்களிடம் சென்று பேசவேண்டும் என்று கூறியுள்ளார் பிரசாந்த் கிஷோர்.

Also read: பக்கா அரசியல்வாதியா யோசிச்ச விஜய்.. கடுப்பான மக்கள்! பிளான்ன சேஞ்ச் பண்ண சொன்ன தளபதி

Trending News