சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

25 நாட்களில் ஆடுஜீவிதம் வசூல்.. கலெக்ஷனை அள்ளும் மலையாள சினிமா

Prithviraj : உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பிரித்விராஜ் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் படம் வசூல் வேட்டையாடி வருகிறது. அரபு நாட்டில் பல கனவுகளுடன் வேலைக்கு செல்லும் இளைஞன் பட்ட கஷ்டத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

கிட்டத்தட்ட 16 வருடங்களாக இந்த படத்தை திரைக்கு கொண்டு வர கஷ்டப்பட்ட நிலையில் ஒருவழியாக வெளியாகி வெற்றி கண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பிரித்விராஜ் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்.

அதற்கு கைமேல் பலனாக இப்போது ஆடுஜீவிதம் படம் வசூலை வாரி குவித்து வருகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி ஆடு ஜீவிதம் படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.

25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம்

அதன்படி முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட 47 கோடி வசூல் செய்திருந்தது. இப்போது 25 வாரங்கள் கடந்த நிலையில் கிட்டத்தட்ட 150 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. மேலும் தொடர்ந்து திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல்லாக உள்ளது.

ஆகையால் ஆடுஜீவிதம் படம் 200 கோடி வசூலை அள்ளும் என படக்குழு நம்பிக்கையில் இருக்கிறார்கள். சமீப காலமாகவே மலையாள மொழி படங்கள் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

மஞ்சும்மல் பாய்ஸ் 200 கோடியை தாண்டி வசூல் செய்திருந்தது. அதே போல் பிரேமலு படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்போது அந்த லிஸ்டில் பிரித்விராஜ் ஆடுஜீவிதம் படமும் இணைந்திருக்கிறது.

Trending News