புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பொறாமையில் பொங்கி எழும் கோபி.. இனி தான் பாக்கியலட்சுமி ஆட்டம் சூடு பிடிக்க போகிறது

விஜய் டிவியில் கொஞ்சம் நல்லா போகுற சீரியல் என்றால் அது நம்ம பாக்கியலட்சுமி தான். அதிலும் இப்ப வந்த ப்ரோமோவை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத அளவிற்கு அதிரிபுதிரியாக பாக்கியலட்சுமி ஆட்டம் சூடு பிடிக்கப் போகிறது.

பாக்கியலட்சுமி, கோபியிடம் விட்ட சவாலில் ஜெய்ப்பதற்காக ஒவ்வொரு கல்யாண ஆர்டரையும் எடுத்து நடத்தி வந்தார். அடுத்த கட்டமாக ராதிகா ஆபீஸில் கேட்டரிங் ஆர்டரை எடுத்ததற்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார். அதில் பாக்யலட்சுமி குடும்பத்தினர் மற்றும் ராதிகாவும் வந்து கலந்து கொள்கிறார். அத்துடன் அதில் கலந்து கொள்வதற்கு ரஞ்சித் மற்றும் அவரது நண்பர்களும் வருகிறார்கள்.

Also read: பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புது ஹீரோ.. டம்மி பீஸ் ஆகும் கோபி

ஒரு கட்டத்தில் பாக்கியலட்சுமியை பார்த்து ரஞ்சித், நீங்க இன்னும் இளமையாய் இருக்கீங்க, அழகாவும் இருக்கீங்க, உங்களுக்கு என்ன ஒன்பது வயசுல ஒரு குழந்தை இருக்குமா அப்படின்னு கேட்கிறார். அவர் கேட்டதை பார்க்கிற நம்மளுக்கு கொஞ்சம் காண்டாகுது அப்படின்னா பாவம் அங்க இருக்கிற கோபிக்கு வயிறு எரியாதா என்ன.

அந்த காட்சியை பாத்துட்டு கோபி கொடுக்கிற ரியாக்ஷன் அய்யய்யோ வேற லெவல் சொல்லவே முடியாது வார்த்தையால். அந்த அளவுக்கு ரியாக்ஷன்ல பின்னி இருக்காரு மனுஷன். இவருடைய ரியாக்ஷனுக்காகவே இந்த ப்ரோமோவை நிறைய பேரு திரும்பத் திரும்ப பார்ப்பார்கள். ஏனென்றால் கோபிக்கு அந்த அளவிற்கு வயிற்றெரிச்சல் தாங்க முடியாமல் பொறாமையில் பொங்கி எழுகிறார்.

Also read: எக்ஸ் பொண்டாட்டியால் வயிற்றெரிச்சலில் கோபி.. டிஆர்பிக்காக மீண்டும் சூடு பிடிக்கும் பாக்கியலட்சுமி

இவருக்கு அடுத்து அந்த பாட்டி வேற, அவங்க பங்குக்கு இவங்க எல்லாம் யாரு இங்க எப்படி வந்தாங்க என்று கேட்கிறார். அதற்கு நம்ம இனியா பதனி பதனி என்று சொல்லிட்டு நன்றாக பற்றவைத்துவிட்டார்கள். இவங்க எல்லாரும் அம்மாவோட இங்கிலீஷ் டியூஷன் பிரண்ட்ஸ் என்று பாட்டியிடம் கோர்த்து விட்டிருச்சு. ஏற்கனவே இந்த பாட்டி சும்மாவே ஆடும் இப்ப வேற காலில் சலங்கை கட்டி விட்டாச்சு சொல்லவா செய்யணும்.

மேலும் இந்த நாடகத்துக்கு சுவாரஸ்யத்தை அதிகளவில் கொடுத்தது நம்ம ரஞ்சித் தான். அவர் வந்ததற்கு பிறகு தான் கோபியோட உண்மையான முகமே நமக்கு தெரியப்போகிறது. இனிமேல் கோபி காமெடி பீஸாக இருக்கப் போகிறாரா இல்லையென்றால் பொறாமையில் பொங்கி எழுப் போகிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Also read: சக்காளத்தி முன் கெத்து காட்டிய பாக்கியலட்சுமி.. கிழித்து தொங்கவிடப்பட்ட ராதிகா

Trending News