Ethirneechal daughter-in-law: சன் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் சிம்ம சொப்பனமாக எதிர்நீச்சல் சீரியல் ஜொலித்து வருகிறது. அதற்கு காரணம் கதை, வசனம் என்றாலும் இந்த நாடகத்தில் நடித்து வரும் கதாபாத்திரங்களின் எதார்த்தமான நடிப்பு பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. அந்த வகையில் குணசேகரனின் வீட்டு நான்கு மருமகளும் அடிமை வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.
கூடிய சீக்கிரத்தில் வாடிவாசலை தாண்டி திமிரும் காளையாக வெற்றி பெறுவார்கள் என்று கதை நகர்ந்து வருகிறது. ஆனால் இதில் அந்த நான்கு மருமகள்களுமே சும்மா வாய்சவடால் மட்டும் விட்டு வருகிறார்கள். அதிலும் ஜனனி பெயருக்கு தான் ஹீரோயின் மற்றபடி நாடகத்தில் ஒரு டம்மி பீஸ் ஆக தான் இருந்து வருகிறார்.
அதனால் ரசிகர்கள் சந்திரமுகி படத்தில் பாம்பு எப்படியோ அது மாதிரி தான் ஜனனியின் கேரக்டர் என்று நக்கல் அடித்து வருகிறார்கள். ஆனால் நிஜத்தில் இவர் பண்ணிய ஒரு காரியம் தற்போது விபரீதமாக மாறி இருக்கிறது. கண்ணுமுன்னு தெரியாமல் மது அருந்திவிட்டு விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அதாவது இரு தினங்களுக்கு முன் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ஜனனி எனும் மதுமிதா காரை வேகமாக ஓட்டி வந்திருக்கிறார்.
Also read: பெற்ற மகனுக்கு எமனாக நிற்க போகும் விசாலாட்சி.. தர்ஷினியை பகடைகாயாக வைத்து ஆடும் குணசேகரன்
அத்துடன் காருக்குள் இவருடன் ஆண் நண்பர் ஒருவர் இருந்திருக்கிறார். இவர்கள் இருவருமே மது அருந்தியதாக போலீசார் தகவல் கொடுத்து இருக்கிறார்கள். வார கடைசியானாலே பிரபலங்கள் பலரும் மது அருந்திவிட்டு கிழக்கு கடற்கரை சாலை பகுதிக்கு போவது வழக்கம்தான். அதே மாதிரி ஜனனியும் மது அருந்திவிட்டு சோழிங்கநல்லூர் பக்கத்தில் ஒரு வழி பாதையில் ராங் ரூட்டில் காரை ஓட்டிட்டு போயிருக்கிறார்கள்.

அதிகமான வேகத்துடன் வந்ததால் எதிரே பைக்கில் வந்து கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருத்தர் மேல் இவர்கள் கார் மோதி பலத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது. பிறகு அந்த இடத்துக்கு போலீஸ்காரர்கள் வந்ததும் அவர்கள் கிட்ட ஜனனி, எங்கள் மீது எந்த தப்பும் இல்லை போலீஸ்காரர் தான் வேகமாக வந்து எங்க கார்ல மோதிட்டாங்க என்று வாக்குவாதம் செய்திருக்கிறார். உடனடியாக போலீசார் ரெண்டு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் காரை பறிமுதல் செய்து இருக்கிறார்கள்.
அடிபட்ட அந்த போலீஸ்காரரை பக்கத்தில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. நாடகத்தில் தான் ஜனனி பார்ப்பதற்கு அமைதியாக இருக்கிறார் ஆனால் நிஜத்தில் பண்ற வேலை எல்லாம் அதிக பிரசிங்கித்தனமாக தான் இருக்கிறது. அந்த வகையில் ஊருக்கு தான் உபதேசம் மற்றபடி நிஜத்தில் செய்கிற வேலைகள் எல்லாம் கேப்மாரித்தனமாக தான் இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.
Also read: மனோஜ் மூலம் ரோகினிக்கு பெரிய ஆப்பை வைக்கும் விஜயா.. குதூகலத்தில் கொண்டாடும் முத்து