வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

மக்களை காக்கும் மாவீரன் சும்மா டம்மி வசனமா.? நிஜத்தில் சிவகார்த்திகேயனுக்கு எதிராக நடக்கும் போராட்டம்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாவீரன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி வாகை சூடியது. அதில் சிவகார்த்திகேயன் மக்களை காக்கும் மாவீரனாக நடித்து அசத்தியிருப்பார்.

ஆனால் உண்மையில் இது போன்ற வசனமும், காட்சிகளும் படத்தில் மட்டும் தானா நிஜ வாழ்க்கையில் மக்கள் மேல் அவருக்கு அக்கறை இல்லையா என்ற கேள்வி தான் இப்போது எழுந்துள்ளது. இதற்கு ஒரு வலுவான காரணமும் இருக்கிறது.

Also read: தியேட்டரில் டபுள் மடங்கு லாபம் பார்த்த மாமன்னன்.. வசூலுக்கு எண்டு கார்ட் போட்டு ஓடிடியில் ரிலீஸ் செய்த உதயநிதி

அதாவது தற்போது சிவகார்த்திகேயனுக்கு எதிராக ஒரு போராட்டம் நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிக்கு அருகே சிவகார்த்திகேயனுக்கு சொந்தமாக தார் தொழிற்சாலை ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது.

அதிலிருந்து வெளிவரும் நச்சுப் புகை உடல்நல பாதிப்பையும் சுவாச கோளாறையும் ஏற்படுத்துவதாக தற்போது அப்பகுதி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் பேசிய ஒரு பெண்மணி, நாங்கள் ஒரு வார காலமாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

Also read: ரெண்டுகெட்டா படமாய் மாறிய மாவீரன்.. ஆர்வக்கோளாறாக நடித்து சொதப்பிய சிவகார்த்திகேயன்

இது குறித்து கலெக்டர் அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் கூட புகார் அளித்துள்ளோம் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த நச்சுப் புகையால் எங்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட ஒரு பெரியவர் இந்த பிரச்சனையின் காரணமாக மாரடைப்பால் இறந்துவிட்டார் எனக் கூறி பகீர் கிளப்பி உள்ளார்.

அது மட்டும் இன்றி தினமும் ஏதாவது ஒரு பிரச்சனை என்று நாங்கள் அடிக்கடி மருத்துவமனை சென்று கொண்டிருக்கிறோம். குழந்தைகள் கூட இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து எவ்விதமான விளக்கமும் இதுவரை வரவில்லை.

Also read: பிசிறு தட்டாமல் ரஜினியை பாலோ செய்யும் சிவகார்த்திகேயன்.. மாவீரன் பட தயாரிப்பாளர் சொன்ன ரகசியம்

Trending News