வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2025

சந்தியா ராகம் சீரியலில் அப்பா பேச்சை கேட்டு விவாகரத்து கேட்ட தனம்.. கதிர் கொடுத்த ட்விஸ்ட், ஏமாந்த ரகுராம்

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், தன் மகளின் வாழ்க்கைக்குள் வலுக்கட்டாயமாக கதிர் புகுந்து விட்டான். அவன் எனக்கு சரியான மருமகனும் இல்லை, என் மகளுக்கு ஏற்ற கணவரும் இல்லை என்று ரகுராம் கதிர் மீது வெறிகொண்ட கோபத்தில் இருக்கிறார். அதற்கேற்ற மாதிரி பார்வதி பத்மா சதி செய்ததில் அநியாயமாக கதிர் மாட்டிக் கொண்டார்.

தனத்திற்கு பாஸ்போர்ட் வந்த நிலையில் அதில் தனம் கதிரவன் என்று பெயரை பார்த்த ரகுராம், கதிரவனை நான் ஒரேடியாக தனத்தின் வாழ்க்கையில் இருந்து விலகி காட்டுகிறேன் என்று சவால் விட்டார். அதன்படி தனத்தை கூப்பிட்டு உனக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கையை நான் தேடித் தருகிறேன். நீ கதிரை விவாகரத்து பண்ணுகிறாயா என்று கேட்கிறார்.

அப்பாவின் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்க முடியாத தனம் சரி என்று சொல்லிய நிலையில் விவாகரத்து கேட்டுக் கோட்டுக்கு போய் விட்டார்கள். தனத்துக்கு மனசுளவில் கதிரை விட்டு பிரிய மனமில்லை என்றாலும் அப்பா சொன்னதற்காக விவாகத்துக்கு சரி என்று சொல்லி விடுகிறார். அப்பொழுது கதிரை கூப்பிட்டு உங்களுக்கு விவாகரத்து ஓகேவா என்று கேள்வி கேட்கிறார்கள்.

ஆனால் கதிர் எனக்கு தனம் வேண்டும் அவளை விட்டு என்னால் பிரிந்து இருக்க முடியாது என்று கோர்ட்டில் சொல்லிவிடுகிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ரகுராம் மொத்தமாக ஏமாந்து போய் விடுகிறார். இதனை தொடர்ந்து தனம் மனசுக்குள் இருக்கும் காதலை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று மாயா ப்ளான் பண்ணி விட்டார்.

உடனே தனத்திற்கு போன் பண்ணி கதிருக்கு அடிபட்டு இருக்கிறது ஹாஸ்பிடல் உடனே வா என்று தகவல் போய்விடுகிறது. இதைக் கேட்டதும் துடித்துப் போன தனம் ஹாஸ்பிடலுக்கு வந்து கதிர் நீதான் என்னுடைய உலகமே. நீ இல்லை என்றால் என்னால் வாழவே முடியாது என்று காதலை வெளிப்படுத்தும் விதமாக வேறு ஒருவரை பார்த்து கதிர் என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்.

ஆனால் கதிருக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று ஹாஸ்பிடலில் இருக்கும் ரூமுக்குள் இருந்து வெளி வருகிறார். பிறகு கதிரை பார்த்ததும் சந்தோஷத்தில் தனம் ஓடிப்போய் கதிரை அரவணைத்துக் கொள்கிறார். இந்த நாடகத்தை அரங்கேற்றிய மாயா இதுதான் உண்மையான காதல். உன் மனதில் இவ்வளவு காதல் வைத்துக் கொண்டு ஏன் வெளியே நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறாய்.

கதிர் இல்லை என்றால் உன்னால் இருக்க முடியாது என்று உனக்கே தெரியும். அப்படி இருக்கும் பொழுது ஏன் விவாகரத்துக்கு சம்மதம் சொன்னால் என்று கேட்டு தனம் செய்த தவறை புரிய வைத்து விட்டார். அந்த வகையில் ரகுராம் நினைத்தபடி கதிர் மற்றும் தனம் விவாகரத்து பண்ணாமல் ஒன்று சேர்ந்து வாழ ஆரம்பித்து விடுவார்கள். வழக்கம் போல் இந்த விஷயத்தில் பத்மா பார்வதி தோற்றுப் போய் விட்டார்கள்.

Trending News