ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

24 வருஷத்துல இருபத்திநாலு படம், அஞ்சு படம் மட்டும் ஹிட்.. எல்லாம் நடிகையை மேரேஜ் பண்ணி வீணா போன டைரக்டர்

In tamil cinema kushboo husband Director Sundar c and his flop movies: மணிவண்ணனின் உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆன சுந்தர் சி, ஜெயராம் குஷ்பூ நடித்த முறைமாமன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். நடிகை குஷ்புவை காதலித்து கரம் பிடித்த சுந்தர் சி இயக்குனராக மட்டுமல்லாமல் இவருடன் இணைந்து படங்களை தயாரித்தும் சின்னத்திரை தொடர்களை தயாரித்தும் வருகின்றார்.

சூப்பர் ஸ்டார் உடன் அருணாச்சலம், கமலுடன் அன்பே சிவம் என முன்னணி நடிகர்களுடன் பல படங்களை இயக்கிய சுந்தர் சியின் படங்கள் பல வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் உள்ளத்தை அள்ளித்தா, வின்னர், ஆம்பள,அரண்மனை, கலகலப்பு போன்றவை விமர்சன ரீதியாகவும் பிளஸ் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றன.

எப்போதும் கூல்ஆக இருக்கும் சுந்தர் சி அன்பே சிவம் படத்தை பற்றி யாராவது புகழ்ந்து பேசினால் காண்டாகி விடுவாராம். அன்பே சிவம் வந்த புதிதில் அந்த படத்தைக் கொண்டாடாதவர்கள் காலம் தாழ்த்தி அதை விமர்சிப்பது ஏன் என்று கத்த ஆரம்பித்து விடுவாராம்.

Also read: குஷ்பூ மேரேஜ் பண்ண ஆசைப்பட்ட 3 பிரபலங்கள்.. மிரட்டலுக்கு பயந்து சுந்தர் சி யை கல்யாணம் பண்ணிய பரிதாபம்

உண்மையாகவே சுந்தர் சி ஒரு டேலண்ட்ஆன டைரக்டர். காமெடி வசனங்கள் எழுதும் போதும் ஒரு முறைக்கு இருமுறை தானாக சொல்லி பார்த்து சரளமாக வருகிறது என்றால் மட்டுமே பயன்படுத்துவாராம். ஆனால் இவ்வளவு திறமையான இயக்குனர் சில சமயம் கடமைக்கு இயக்குவது போல் அவரது படைப்புகள் அமைவது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளிக்கிறது.

ஆரம்பத்தில் திரைத் துறையில் தடம் பதிக்க கடின உழைப்புடன் பல தோல்விகளை கடந்து 24 வருடங்களில் இருபத்திநாலு படங்களை எடுத்து முடித்து உள்ளார். மனைவி குஷ்பு மீதான காதல் கண்ணை மறைத்ததோ அல்லது மதியை மறைத்தது என்று தெரியவில்லை. தொடர்ந்து  தோல்வியான படங்களையே கொடுத்து ரசிகர்களின் அனுதாபத்தையும்  சந்தித்தார் சுந்தர் சி.

எவர்கிரீன் திரைக்கதையான பேய் மற்றும் த்ரில்லர் காமெடியை வகையை உபயோகித்து அவர் எடுத்த அரண்மனை ஹிட் ஆகவே தொடர்ந்து அரண்மனை 2, 3, 4 என அடுத்தடுத்த பாகங்களில் பிசியானார் சுந்தர் சி

அதேபோல் கமர்சியல் ஹிட்டான விமல் சந்தானம் சிவா நடித்த கலகலப்பு  ஹிட்டானதும் கலகலப்பு 2  மற்றும் கலகலப்பு 3 வரை சென்றார் சென்றுள்ளார் சுந்தர் சி. கலகலப்பு அளவிற்கு கலகலப்பு 2 ஹிட்டாக விட்டாலும் வசூலில் ஓரளவு தன்னிறைவு அடைந்ததால் கலகலப்பு 3 க்கு இளம் ஹீரோக்களை தேடி வருவதாக தகவல்.

Also read: திகிலை காட்டிய ரஜினியின் 3 படங்கள்.. தலைவர் நடித்ததை பட்டி டிங்கரிங் செய்து ஸ்கோர் செய்த சுந்தர் சி

Trending News