புதன்கிழமை, ஜனவரி 15, 2025

70, 80களில் ஜிவி பிரகாஷ் போல வெள்ளிக்கிழமை ஹீரோ என புகழ் பெற்றவர்.. வரிசையாக வரப்போகும் எட்டு படங்கள்

In the 70’s and 80’s, GV Prakash made a name for himself as a Friday hero: தமிழ் சினிமாவில் சத்தமில்லாமல் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோ என்றால் அது ஜிவி பிரகாஷ் குமார் தான்.

முன்னணி நடிகர்களை விட அதிகமான படங்களை கைவசம் வைத்து அவர்களுக்கே சவால் விட்டு வருகிறார் இந்த சின்ன தம்பி.

தற்போது ஜிவி பிரகாஷ் குமார் வெள்ளிக்கிழமை ஹீரோ என பெயரெடுத்து உள்ளார். காரணம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவரது படங்கள் தவறாது ரிலீஸ் ஆகி விடுவது தான்.

ரிபெல், கள்வன், டியர் என ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் திரையில் அட்டனன்ஸ் போட்டு வருகிறார் ஜீவி

இப்போது 12 படங்களில் நடித்து வருகிறார் ஜீவி. இதில் ஆயிரம் ஜென்மங்கள், 13,வெர்ஜின் மாப்பிள  போன்ற எட்டு படங்கள் ரிலீஸ்க்கு ரெடி ஆகி உள்ளது. 

பேட்டி ஒன்றில்,  எப்படி உங்களால் எத்தனை படங்கள் நடிக்க முடிகிறது என்ற நிருபரின் கேள்விக்கு, நான் வேலையை உடனுக்குடன் முடித்து விடுவேன் இதுதான் எனது வெற்றியின் ரகசியம் என்று தன்னடக்கத்துடன் பகிர்ந்து கொண்டார் ஜிவி.

70 மற்றும் 80 களின் வெள்ளிக்கிழமை நாயகன்

70 மற்றும் 80களில் இந்த மாதிரி  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனது படங்களை ரிலீஸ் செய்தவர் தான் தமிழகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர்

இவரை “ஃப்ரைடே ஹீரோ” “வெள்ளிக்கிழமை நாயகன்” என ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்

குறைந்த சம்பளம் என்றாலும் எந்தவித அலட்டலும் ஈகோவும் இல்லாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வந்தாராம் ஜெய்சங்கர்.

அது மட்டுமல்லாமல் கலியுக கர்ணனாக வாழ்ந்த ஜெய்சங்கர் தனது வீட்டு கார் டிரைவர்,  வேலை ஆள், நண்பர்கள் என பலருக்கும் உதவி செய்து, தயாரிப்பாளர்களாக கூட ஆக்கிவிட்டு இருக்கிறாராம்.

ஒன்று இரண்டு படங்கள் நடித்த உடனேயே தனக்குரிய மார்க்கெட்டை உயர்த்தி ஆட்டிட்யூட் காண்பிக்கும் இன்றைய உலகில்,

புகழின் உச்சம் தொட்ட பின்னும் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் தன்னடக்கத்துடன் தனித்து நின்றார் ஜெய்சங்கர்.

இவரை போலவே தமிழ் திரையுலகில் பலரும் அவமானப்படுத்திய பின்பும் அதை எதையும் கண்டு கொள்ளாமல்  தன்னுடைய இனிமையான குணங்களால் அனைவருடைய மனத்தையும் கவர்ந்து உயர வந்து கொண்டிருக்கிறார் ஜிவி.

Trending News