அய்யனார் துணை சீரியலில் சோழனிடம் வீட்டை விட்டு போறேன்னு சொல்லும் நிலா.. குடும்பத்துக்காக கெஞ்சும் சேரன்

ayyanar thunai
ayyanar thunai

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலாவுக்கு இந்த கல்யாணம் பிடிக்குதோ இல்லையோ, சோழன் ஆசைப்பட்ட மாதிரி எல்லாமே ஒவ்வொன்றாக நடைபெற்று வருகிறது. நிலாவைப் பார்த்து அந்த நொடியில் சோழன், நிலாவை காதலிக்க ஆரம்பித்து விட்டார். நிலாவுக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து கல்யாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் சோழன் நினைத்த மாதிரி நிலா கழுத்தில் தாலி கட்டி விட்டார்.

அத்துடன் வீட்டிற்கு கூட்டிட்டு வந்து ஊர் மக்கள் முன்னாடியும் முறைப்படி தாலி கட்டி சோழன் நிலா கணவன் மனைவி என்ற முத்திரையை பதித்து விட்டார்கள். ஆனாலும் நிலா வரவேற்பு எல்லாம் முடிந்த நிலையில் சோழனிடம் நான் காலையில் இந்த வீட்டை விட்டு போய் விடுவேன். எனக்கு கடைசியாக நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும். ஹாஸ்டல் பார்த்து விசாரித்துவிட்டு நாளைக்கு நான் போய் விடுவேன்.

இதுவரை நீங்கள் செய்த உதவிக்கு நன்றி, இனியும் என் வாழ்க்கையில் நீங்கள் வர வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். இதையெல்லாம் வெளியில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த சேரன், சோழனிடம் எதற்காக நீ இப்படி பண்ணினாய். எங்களிடம் நிலாவும் நீனும் காதலிப்பதாகவும், நிலா கல்யாணம் பண்ணினால் உன்ன தான் கல்யாணம் பண்ணுவதாக அடம்பிடித்ததாக சொன்னாய்.

ஆனால் அந்த பொண்ணு உன் மீது எந்தவித ஆசையும் படவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையில் தான் கல்யாணம் நடந்து இருக்கிறது என்று நீ ஏன் எங்களிடம் மறைத்தாய். அட்லீஸ்ட் என்னிடம் மட்டுமாவது சொல்லி இருந்தால் நான் இந்த ஏற்பாடு பண்ணிருக்க மாட்டேன். ஊர்க்காரங்க முன்னாடியும் அசிங்கப்படத் தேவையில்லை. இப்பொழுது பாரு இவ்வளவு தூரம் நடந்த பிறகு அந்த பொண்ணு வீட்டை விட்டு போகிறேன் என்று சொல்கிறது.

அப்படியே இந்த பொண்ணு போய்விட்டது என்றால் இதைவிட அசிங்கம் வேற எதுவும் இல்லை. ஏற்கனவே நம்ம குடும்பத்துக்கு எந்த பொண்ணு வந்து தங்கமாட்டாங்க என்ற ஒரு பெயர் இருக்கிறது. அதை மறுபடியும் நிரூபிக்கும் விதமாக நீ ஒரு காரியம் செய்து எல்லாத்தையும் தலைகுனிய வைத்து விட்டாய் என்று பீல் பண்ணி சொல்கிறார். அதற்கு சோழன், அந்த பொண்ணை நான் உண்மையாக காதலிக்கிறேன்.

நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்க விட மாட்டேன் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். இருந்தாலும் சேரன் என்ன பண்ணுவது என்று தெரியாமல் இருக்கும் பட்சத்தில் நிலாவை சந்தித்து இந்த குடும்பத்திலேயே நீ இருந்து விடு. உனக்கு என்ன தோணுதோ அதை செய்து உன்னுடைய சந்தோசமான வாழ்க்கையை இங்க இருந்து வாழ பழகிக்கோ என்று நிலாவிடம் சேரன் கெஞ்சுகிறார்.

அதனால் எப்படியும் நிலா சோழன் குடும்பத்தை விட்டு போக மாட்டார். இனி அந்த குடும்பத்தின் ஒருவராகத்தான் நிலா இருக்கப் போகிறார். இதற்கு இடையில் கார்த்திகாவும் சேரனை ஆசைப்பட்டு வருவதால் அடுத்து இவர்களுடைய கல்யாணம் அந்த குடும்பத்தின் தலையெழுத்தை மாற்றப் போகிறது.

Advertisement Amazon Prime Banner