புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரீ என்ட்ரியில் சொதப்பும் வடிவேலு.. தாக்கு பிடிக்க முடியாமல் ஓடிய சம்பவம்

பல வருடங்களாக தன்னுடைய நகைச்சுவையால் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலு சமீப காலமாக ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதற்கு முன்பாகவே அவருடைய நடவடிக்கை பல பிரச்சனைகளை கிளப்பியது. அதனாலேயே அவர் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் அவரின் நடிப்பில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வெளிவந்தது. மிகப்பெரிய அளவில் பிரமோஷன் செய்யப்பட்ட அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதிலும் சிலர் வடிவேலுவின் காமெடி பழைய பாணியில் இருக்கிறது என்றும் புதிதாக ஒன்றும் இல்லை எனவும் விமர்சனம் செய்தனர்.

Also read: வடிவேலுவை அவமானப்படுத்திய இயக்குனர்.. ஓவர் அலப்பறையால் ரணகளமான சூட்டிங் ஸ்பாட்

இருப்பினும் அவர் தற்போது சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற படங்களை நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் வடிவேலுவின் உதவியாளர் அவரிடம் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என தெறித்து ஓடி விட்டாராம். ஏனென்றால் வைகை புயலின் அடாவடியை தாங்க முடியாத தயாரிப்பாளர்கள் உதவியாளரை போட்டு காய்ச்சி எடுத்திருக்கிறார்கள்.

பல பஞ்சாயத்துகளுக்கு பிறகு நடிக்க வந்த வடிவேலு இனிமேலாவது திருந்தி விடுவார் என்று பலரும் நினைத்தனர். ஆனால் அதற்கு மாறாக அவருடைய அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிலும் சம்பள விஷயத்தில் இருந்து கால்ஷூட் வரை அவரால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படாத பாடு படுகிறார்கள்.

Also read: கவுண்டமணி பெஸ்ட் சக்ஸஸ்ஃபுல் 5 ஹீரோக்கள்.. செந்திலுக்கே டஃப் கொடுத்த சத்யராஜ்

அந்தக் கோபம் அப்படியே அவரின் உதவியாளர் பக்கம் திரும்புகிறதாம். ஒரு நாள் திட்டு வாங்கினால் கூட பரவாயில்லை. ஒவ்வொரு நாளும் இதே தொடர் கதையாகி போனதால் அவர் தற்போது வடிவேலுவின் சங்காத்தமே வேண்டாம் என்று ஓடிவிட்டாராம். இத்தனைக்கும் உதவியாளர் படும்பாடு வடிவேலுவுக்கு தெரியுமாம். ஆனாலும் அவர் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார்.

இதைப் பார்த்த அந்த உதவியாளர் இனிமேல் நம் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆகி இருக்கிறார். இப்படி கரும்பு மிஷினில் மாட்டிய கதையாகி போன அந்த உதவியாளரை பற்றி தான் திரையுலக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இனியும் வடிவேலு மாறவில்லை என்றால் அவருடைய ரீ என்ட்ரி சொதப்பிவிடும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

Also read: காமெடியன்கள் செண்டிமெண்டாக அழு வைத்த 5 படங்கள்.. முரளியுடன் கண்ணீர் வரவழைத்த வடிவேலு

Trending News