Serial Trp Rating List: காலை 10 மணி தொடங்கி இரவு 10 மணி வரை குடும்பத்தில் இருக்கும் இல்லத்தரசிகளை பிசியாக வைத்துக் கொண்டிருப்பது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான். அதிலும் சன் டிவியை அடிச்சுக்கவே முடியாத அளவிற்கு எக்கச்சக்கமான சீரியல்களை தொடர்ந்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் புத்தம் புது சீரியல்களை மாதத்திற்கு ஒரு முறை இறக்கி மக்களை திசை திருப்ப விடாமல் வருகிறார்கள்.
அதனால் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி அதிகப் புள்ளிகளை வாங்கி கெத்து காட்டி வந்தது. ஆனால் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் இதுவரை வாங்கின புள்ளிகளை விட கம்மியான பாயிண்ட்களை எடுத்து கொஞ்சம் சொதப்பி இருக்கிறது. எந்த சீரியல்கள் எவ்வளவு புள்ளிகளை பெற்றிருக்கிறது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
எதிர்நீச்சல்: எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த எதிர்நீச்சல் சீரியல் வந்தாலும் புதுசாக பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. அரைச்ச மாவை தான் அரைக்கிறார்கள். அழுகிற பெண்கள் அழுது கொண்டே அடுப்பாங்கரையில் தான் புரணி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கேற்ப குணசேகரன் வீட்டு மருமகள்கள் வாயாலேயே வடை சுடுகிறார்கள். நாடகம் ஆரம்பித்த முதல் நாள் ஒவ்வொருவரும் வேலையில் பிஸியாக இருப்பது போல் காட்டினார்கள். ஆனால் அடுத்தடுத்து பிரச்சனைகளையும் புலம்பல்களையும் மட்டுமே காட்டிக் கொண்டு வருகிறார்கள். அதனால் தான் என்னமோ இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 8.01 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்தில் இருக்கிறது.
அன்னம்: அப்பா மற்றும் சித்திக் கொடுமையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக மாமாவை கல்யாணம் பண்ண வேண்டும் என்று நினைக்கும் அன்னத்தின் ஆசை நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் மாமா பையன் வேறொருவரை காதலித்து வருகிறார். இருந்தாலும் இவர்களுடைய வாழ்க்கை எப்படி ஒன்றாக இணைய போகிறது என்பது பார்ப்பதற்கு விறுவிறுப்பாக போகிறது. அந்த வகையில் 8.27 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது.
ராமாயணம்: புராணக் கதைகளாக இருந்தாலும் மக்கள் விறுவிறுப்பாக இராமாயணத்தை பார்த்து தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதனால் தான் டிஆர்பி ரேட்டிங்கில் ஐந்தாவது இடம் அல்லது ஆறாவது இடத்தில் இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் 8.54 புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
மருமகள்: அப்பா ஒரு கஷ்டத்தில் இருக்கும் பொழுது பிரபு, அப்பாவின் மானத்தை காப்பாற்றுவதற்காக பத்து லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து உதவி செய்தார். ஆனால் தற்போது பிரபு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட பொழுது ஆதிரையின் சித்தி பத்து லட்ச ரூபாய் எடுத்து வந்து கொடுக்கிறார். ஆனால் அதற்கு ஈடாக ஒரு கண்டிஷன் போடுகிறார். பணத்தை வாங்கிய பிறகு உனக்கும் உங்க அப்பாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இனி அவரை பார்த்து பேசவும் கூடாது என்று சொல்லிவிட்டார். இதனால் ரெண்டு கிட்ட நிலைமையில் ஆதிரை இருந்தாலும் பிரபு பக்கம் போக வேண்டும் என்பதால் சித்தி சொல்வதற்கு தலையாட்டி விடுகிறார். அந்த வகையில் இந்த வாரம் 8.71 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.
கயல்: கயலுக்கு கல்யாணம் ஆனாலும் பிரச்சனை மட்டும் முடிவதாக இல்லை என்பதற்கு ஏற்ப தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் வேதவள்ளிக்கு தெரியாமல் அன்பு, ஷாலினியை கல்யாணம் பண்ணிக் கொண்டார். இதனால் கோபப்பட்ட வேதவள்ளி தேவியை வீட்டை விட்டு அனுப்பி விடுகிறார். ஆனால் தேவியின் வளைகாப்பு இருப்பதால் எப்படியாவது குடும்பம் ஒன்று சேர வேண்டும் என்று கயல் மறுபடியும் போராட ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் இந்த வாரம் 9.46 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
சிங்க பெண்ணே: மகேஷ் அவருடைய காதலை சொல்ல வரும் அந்த தருணத்தில் ஆனந்தி நான் அன்புவை தான் காதலிக்கிறேன் என்று உண்மையை சொல்லப் போகிறார். இதை மகேஷ் எப்படி எடுத்துக் கொள்வார், ஆனந்தி மற்றும் அன்புவின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுவாரா அல்லது அவர்களை பிரிப்பதற்கு சதி செய்வாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் 9.47 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
மூன்று முடிச்சு: சிங்கப்பெண்ணும் கயலையும் பின்னுக்குத் தள்ளி இந்த வாரம் மூன்று முடிச்சு சீரியல் 9.48 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த நாடகம் ஆரம்பித்திருந்தாலும் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே நந்தினி மற்றும் சூர்யாவின் நடிப்பு பார்ப்பவர்களை கவர்ந்து விட்டது. இதனால் சூர்யா குடிப்பதை நிறுத்திவிட்டு நந்தினி உடன் மனம் ஒத்தும் தம்பதிகளாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற பரபரப்புடன் காட்சிகள் நகர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் 9.48 புள்ளிகளை பெற்று முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.