புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

வீரா சீரியலில் வள்ளி அத்தைக்கு புதுசாக வந்த ஜோடி.. காதலை சேர்த்து வைக்க போகும் வீரா மாறன்

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், ராமச்சந்திரன் குடும்பத்தில் வரும் சின்ன சின்ன பிரச்சனைகளும் சண்டைகளையும் பார்த்து ஜோசியக்கரை வீட்டுக்கு வர சொல்லி ஜாதகம் பார்க்கலாம் என்று ராமச்சந்திரனிடம் வள்ளி அத்தை சொல்கிறார். ராமச்சந்திரன் அதன்படி வீட்டுக்கு ஜோசியக்காரரே வரவைத்து ஜாதகத்தை கொடுத்து பார்க்கிறார்.

அப்பொழுது அவர் சொன்னது என்னவென்றால் குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து குலசாமி கோவிலுக்கு போய் கும்பிட்டு பூஜை பண்ணிட்டு வரணும் என்று சொன்னார். அதன்படி ராமச்சந்திரன் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் கிராமத்திற்கு சென்று அங்கு இருக்கும் அவர்களுடைய வீட்டில் தங்கி கோவில் பூஜை பண்ணலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள்.

அதன்படி கிராமத்து வீட்டிற்கு வந்து அந்த வீட்டில் அனைவரும் தங்க ஆரம்பித்து விட்டார்கள். பிறகு எல்லோரும் சேர்ந்து கோயிலுக்கு போன நிலையில் மாறன் வீரா மற்றும் ராகவன் கண்மணி அனைவரும் ஜோடியாக இருப்பதை பார்த்து அங்கிருக்கும் ஊர் தலைவர்கள் அடிக்கடி இப்படி வந்துட்டு போங்க. குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக இருக்க முடியும் என்று அட்வைஸ் பண்ணுகிறார்கள்.

உடனே அனைவரும் சேர்ந்து சாமி கும்பிடும் அந்த தருணத்தில் புதுசாக ஒருவர் வருகிறார். அவரை வள்ளி அத்தை பார்த்ததும் வெட்கத்தில் தலை குனிந்து ஓர கண்ணாலே பார்த்து சைட் அடிக்கிறார். அதே மாதிரி அந்த நபரும் வள்ளியை பார்த்து வெட்கப்படுகிறார். இப்படி இவர்கள் இருவரும் மாத்தி மாத்தி பார்த்த நிலையில் இவர்களுக்கு சின்ன வயது காதல் இருப்பது போல் தெரிகிறது.

இந்த காதலை தெரிந்து கொண்ட வீரா மற்றும் மாறன் வள்ளியத்தைக்கு ஒரு ஜோடி கிடைச்சாச்சு என்று சொல்வதற்கு ஏற்ப அந்த நபருடன் வள்ளி அத்தையை சேர்த்து வைக்கப் போகிறார்கள். இனி வள்ளியத்தையும் தனி மரமாக இல்லை என்பதற்கு ஏற்ப அவருடைய ஜோடியுடன் கல்யாணமான நிலையில் தான் சென்னைக்கு மறுபடியும் அனைவரும் திரும்ப வருவார்கள்.

Trending News