Surya accident: நடிகர் சூர்யாவுக்கு நேற்று சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் எதிர்பாராத விபத்து நடந்தது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சூர்யாவும் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை நன்றாக இருக்கிறேன் என அறிக்கை விடுத்து இருக்கிறார். கங்குவா படத்திற்காக சிக்ஸ் பேக், எடை இழப்பு என நிறைய ரிஸ்க் எடுத்த சூர்யா தற்போது பெரிய விபத்திலும் சிக்கி இருக்கிறார்.
என்னதான் சூர்யாவுக்கு ஏற்பட்ட விபத்து பெரிதாக இல்லை, இரண்டு நாள் ஓய்வெடுத்தால் போதும் என்று சொன்னாலும், விபத்து நடந்த விதம் மொத்த பட குழுவையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. உண்மையில் பெரிய கோர விபத்திலிருந்து சூர்யா தப்பித்து இருக்கிறார் என்பதுதான் உண்மை. விபத்து எப்படி நடந்தது என்பதை பற்றி படகுழுவை சேர்ந்தவர்கள் விவரித்து இருக்கிறார்கள்.
Also Read:பட ப்ரமோஷனுக்காக இப்படிலாமா பொய் செல்வது?. பெரும் பரபரப்பை கிளப்பிய சூர்யா
நேற்றைய தினம் பூந்தமல்லிக்கு அருகே உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் கங்குவா படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சூர்யா இந்த படம் முழுக்க டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்து வருவதாக செய்திகள் வெளியானது. இந்த சண்டைக் காட்சிகளும் டூப் போடாமல் சூர்யா நடித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
விபத்து நடந்த திக் திக் நிமிடங்கள்
பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட அந்த சண்டை காட்சிக்கு, 25 முதல் 30 கிலோ எடை உள்ள கேமரா பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த கேமராவை ரோப்பில் கட்டி சண்டை காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்கள். கேமரா கிட்டத்தட்ட 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரோப்பில் இருந்து நகர்ந்து வந்து கொண்டிருந்திருக்கிறது. ஸ்டன்ட் மாஸ்டர்கள் சூர்யாவை சுற்றி நிண்டு கொண்டிருந்திருக்கிறார்கள்.
80 கிலோமீட்டர் வேகத்தில் வந்த கேமரா அருந்து விழும்போது சரியாக சூர்யாவின் தலையில் அடித்திருக்க வேண்டியது. அந்த நேரத்தில் கேமராவை பார்த்த ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் சரியாக சுதாரித்துக் கொண்டு, சூர்யாவை தன் பக்கம் இழுத்து இருக்கிறார், அந்த சமயத்தில் தான் சூர்யாவுக்கு இடுப்பில் கேமரா மோதி இருக்கிறது.
சூர்யாவை உடனேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் படக் குழுவினர். அங்கே அவரை பரிசோதித்து விட்டு ஸ்கேன் எடுத்து பார்த்திருக்கிறார்கள். பெரிய பிரச்சனை எதுவும் இல்லாததால் சூர்யாவை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு, இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
Also Read:அஜித், விக்ரம் தூக்கி எறிந்த 5 படங்கள்.. வம்படியாய் ஐந்தையும் வாங்கி ஜெயித்த ரோலக்ஸ்