20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் அக்டோபர் 17ஆம் தேதி அன்று தொடங்கவிருக்கிறது. கிட்டத்தட்ட 16 அணிகள் பங்குபெறும் இந்த தொடர் நவம்பர் 14ஆம் தேதி வரை நடக்க உள்ளது.
இந்த போட்டிகள் அனைத்தும் எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ளது. அனைத்து நாட்டு வீரர்களும் உலககோப்பை போட்டிகளுக்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றனர். கொரோன வைரஸ் காரணமாக வீரர்கள் எண்ணிக்கை 23க்குப் பதில்பயிற்சியாளர்களுடன் சேர்த்து 30 பேர் கொண்ட பட்டியலை தேர்வு செய்ய ஐ.சி.சி அனுமதித்தது. இதில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
விராட் கோலி, ரோகித் சர்மா. கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டனர். விக்கெட் கீப்பர்களாக ரிஷாப் பன்ட், இஷான் கிஷான் இடம் பெற்றனர். ஆல் ரவுண்டர் இடத்துக்கு ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டார். அஷ்வின், வருண் சக்ரவர்த்தி, ஜடேஜா, ராகுல் சகார், அக்சர் பட்டேலும் தேர்வாகியுள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர்கள் யூனிட்டில் முகமது சமி, புவனேஷ் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மாற்று வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாக்கூர், தீபக் சகார் தேர்வாகியுள்ளனர்.
சீனியர் வீரரான ஷிகர் தவான் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். ஐசிசி நடத்தும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர் தவான். இவர் அணியில் இல்லாததைக் கண்டு ரசிகர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.