தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களுடனும் நடித்த விவேக் நீண்ட காலமாக கமலஹாசனுடன் மட்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வந்தார். அந்த நேரத்தில்தான் இந்தியன் 2 பட வாய்ப்பு கிடைத்தது.
கமல் மற்றும் ஷங்கர் கூட்டணியில் லைகா தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வந்த இந்தியன் 2 படம் பாதி படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் ஏகப்பட்ட பஞ்சாயத்துகளை சந்தித்தது. அதில் ஒன்றுதான் படப்பிடிப்பின்போது நடந்த விபத்து.
அதில் இறந்த மூவருக்கு நிதி கொடுக்கும் விஷயத்தில் கமல், ஷங்கர் மற்றும் லைகா ஆகிய மூவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொஞ்ச நாட்கள் படப்பிடிப்பு நடக்காமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பு.
இதனால் வெறும் 60 சதவீத படப்பிடிப்புகள் மட்டுமே முடிவடைந்த நிலையில் இன்னமும் அடுத்த கட்டத்திற்கு நராமல் அந்த படம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதனால் விவேக் நடித்த காட்சிகள் முழுமை பெறாமல் இருக்கின்றன.
சமீபத்தில் இந்தியன்2 பிரச்சனை நடந்தபோது கூட விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகளை வேறு ஒரு நடிகரை வைத்து மீண்டும் படமாக்கப் போவதாக சங்கர் தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.இதனால் விவேக்கின் நீண்ட கால ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது.
கமலுடன் சேர்ந்து நடித்து அதை திரையில் பார்க்க ஆசைப்பட்ட விவேக்கின் அந்த ஆசை தற்போது அவரது குடும்பத்தினருக்கு கூட கிடைக்க முடியாமல் போய்விட்டது.