Indian 2 Collection: பிரம்மாண்ட கூட்டணியில் கடந்த 12ஆம் தேதி இந்தியன் 2 வெளியானது. உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் முதல் காட்சியிலேயே கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதைத்தொடர்ந்து படம் குறித்து வந்த விமர்சனங்கள் நெகட்டிவாகவே இருந்தது. இதனால் படத்தை தியேட்டரில் பார்த்து என்ஜாய் பண்ணலாம் என இருந்த பாதி ஆடியன்ஸ் இப்போது ஓடிடிக்கு வரட்டும் என அமைதியாகி விட்டனர்.
இதனால் தயாரிப்பு தரப்பு தற்போது கடும் அதிர்ச்சியில் இருக்கிறது. ஏனென்றால் பல கோடிகளை கொட்டி ஏழு வருடங்களாக உருவான இப்படம் நிச்சயம் லாபத்தை அள்ளிக் கொடுக்கும் என்பதுதான் லைக்காவின் எதிர்பார்ப்பு.
வசூலில் அடி வாங்கிய இந்தியன் 2
இதை வைத்து தான் அவர்கள் அடுத்தடுத்த படங்களை ரிலீஸ் செய்யும் முடிவில் இருந்தனர். தற்போது நாளுக்கு நாள் குறைந்து வரும் வசூல் அவர்களுக்கு மரண பீதியை காட்டியுள்ளது. அதன்படி இந்தியன் 2 முதல் நாளில் 26 கோடிகளை வசூலித்து இருந்தது.
அதை அடுத்து இரண்டாவது நாளில் 18 கோடியும் மூன்றாவது நாளில் 15 கோடியும் வசூல் ஆகி இருந்தது ஆனால் நேற்றைய கலெக்ஷனை பொறுத்தவரையில் மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதன்படி நான்காவது நாள் இந்தியன் 2 படத்தின் வசூல் ஐந்து கோடியாகும்.
ஆக மொத்தம் இந்திய அளவில் இப்படம் வெறும் 64 கோடிகளை தான் இதுவரை வசூலித்திருக்கிறது. ஆனால் உலக அளவை பொருத்தவரையில் 135 கோடிகளை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இப்படம் இப்போதும் கூட சோஷியல் மீடியாவில் கலாய்க்கப்பட்டு வருகிறது. மேலும் தியேட்டரில் ரசிகர்களின் வரவும் குறைந்துவிட்டது. அதனால் படத்தை விரைவில் அதாவது அடுத்த மாதமே டிஜிட்டலில் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.
நாளுக்கு நாள் குறையும் இந்தியன் 2 வசூல்
- நெகட்டிவ் விமர்சனங்களால் குறையும் இந்தியன் 2 வசூல்
- டீன்ஸ் படத்தால் பரவச நிலையில் பார்த்திபன்
- இந்தியன் 2 வசூல் 1500 கோடிப்பே