Indian 2: ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 நாளை திரையரங்குகளை அலங்கரிக்க இருக்கிறது. வழக்கம்போல தமிழ்நாட்டில் 9 மணி காட்சிக்கு தான் அனுமதி கிடைத்துள்ளது.
ஆனால் மற்ற மாநிலங்களில் ஆறு மணிக்கே முதல் காட்சி தொடங்கப்பட இருக்கிறது. இதனால் தற்போது கமல் ரசிகர்கள் அனைவரும் பரபரப்பில் இருக்கின்றனர். லைக்காவின் ஏழு வருட போராட்டமே இப்படம்
அதனாலயே சோசியல் மீடியா மற்றும் பிற வழிகளில் பிரமோஷனை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தியன் 2 வெற்றிவாகை சூடி வசூல் லாபம் பார்த்தால் தான் லைக்கா தப்பிக்க முடியும்.
இந்தியன் 2 முதல் நாள் வசூல்
ஏனென்றால் தற்போது கைவசம் தயாரிப்பில் இருக்கும் படங்களை முடித்துவிட்டு நிறுவனத்தையே இழுத்து மூடி விடலாம் என்ற யோசனையில் அவர்கள் இருக்கிறார்களாம். அந்த அளவுக்கு இந்தியன் 2 படாத பாடு படுத்தி இருக்கிறது.
ஒருவேளை எதிர்பார்க்காத அளவில் லாபம் கிடைத்தால் அவர்கள் மனது மாறலாம். அந்த வகையில் தற்போது இந்தியன் 2 அட்வான்ஸ் புக்கிங் அனைத்து மொழிகளுக்கும் சேர்த்து 12 கோடியை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது.
அதிலும் தமிழ்நாட்டில் மட்டுமே ஐந்து கோடியை வசூல் செய்திருக்கிறது. இதை வைத்து கணக்கிடும் போது முதல் நாள் வசூல் நிச்சயம் 50 கோடியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாழ்வா சாவா என போராட்டத்தில் இருக்கும் லைக்கா இதன் மூலம் நிச்சயம் மீண்டு எழுந்து விடும். இதைத்தொடர்ந்து விடாமுயற்சி, வேட்டையன் போன்ற படங்களும் இருப்பதால் தயாரிப்பு தரப்பு தலைதப்பி விடும் என்றே தெரிகிறது.
லைக்காவின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் இந்தியன் 2
- இந்தியன் 2 படத்தை ரிலீஸ் பண்ண கூடாது
- இந்தியன் 2 மேடையில் கமலுக்கு ஐஸ் வைத்த அட்லி
- சித்தார்த்தால் நொந்து போன சிவகார்த்திகேயன்